கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

From Wikipedia, the free encyclopedia

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Remove ads

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Gangaser Ponnambalam, பிறப்பு: சனவரி 16, 1974), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலத்தின் மகனும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெயரனும் ஆவார்.[3]

கஜேந்திரகுமார் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1995 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் "லிங்கன் இன்" கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இலங்கை வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.

Remove ads

அரசியலில்

கஜேந்திரகுமார் 2000 சனவரி 5 இல் அவரது தந்தை குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியலில் இறங்கினார்.[3] 2001 அக்டோபர் 20 இல், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன.[4][5] 2001 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் இக்கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.[6] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[7]

2010 மார்ச்சில், இவர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.[8][9] பொன்னம்பலம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேமமு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது அமைப்பைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[10][11] 2011 பெப்ரவரியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[13][14] 2020,[15][16][17] 2024[18] தேர்தல்களில் பொன்னம்பலம் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads