கண்கிலேடி
பறவைக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்கிலேடி (stone-curlews) (Burhinus oedicnemus0) , திக்கோபு அல்லது தடித்த கணுக்காலி நத்தைக் குத்தி என்பது புர்கினிடே குடும்பத்தில் உள்ள 10 இனங்களைக் கொண்டுள்ளது. இது உலகின் வெப்பமண்டல, மித வெப்பமண்டலங்களில் பரவியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஆத்திரேலியாவிலும் இரண்டு அல்லது மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இவை நீர்ப்பறவைகளாக வகைபடுத்தப்பட்டாலும், பெரும்பாலும் இவை வறள்பகுதிகளிலும் மித வறள்பகுதிகளிலும் காணப்படுகின்றன.
Remove ads
உடலமைப்பு
இவை இடைநிலை முதல் பெரிய அளவு வரையுள்ள வலிய கருப்பு அல்லது மஞ்சட் கருப்பு அலகுகளோடு பெரிய மஞ்சள் கண்களைக் கொண்டு ஊர்வன தோற்றத்துடன் இனத்தெளிவில்லாத சிறகமைவுடன் அமைகின்றன. இவை தடித்த கணுக்காலி, கண்கிலேடி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கணுக்கால் என்பது இதன்நீண்ட அல்லது பசுங்கால்களின் மூட்டுகளைக் குறிக்கிறது.
காணப்படும் பகுதிகள்
மலைப்பகுதிகளைச் சார்ந்த வறள்காடுகள், முட்புதர்களோடு கூடிய தரிசுநிலங்கள், ஊர்ப்புறத்தில் அமைந்த மா முதலான மரங்கள் நிறைந்த காடுகள், நீர்வற்றிய ஆற்றுப் பரப்பு ஆகியவற்றிடையே இணையாகவும் சிறு குழுவாகவும் திரியும்.
உணவு
காலை மாலை நேரங்களில், புழு பூச்சிகள், எலி முதலிய சிற்றுயிர்களை இரையாகத் தேடும். பகலில் மரநிழல், புதர்கள் ஆகியவற்றிடையே ஓய்வுகொள்ளும். வேட்டைக்காரர்கள் தேடித் திரியும் போது மிக அருகில் வரும் வரை சத்தமின்றிப் பதுங்கியபடி படுத்துக் கிடந்து பின் எழுந்து பறக்கும். பிக். பிக். பிக் எனக் குரல் கொடுப்பதை அந்தி நெருங்கும் போதும் அதிகாலையிலும் கேட்கலாம்.

இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஆகத்து வரை கல்லாந்தரையில் புதர் ஓரமாகவும் புல்மேடுகளிலும் தரையில் சிறு குழியில் 2 முட்டைகள் இடும். [2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads