கந்தரோடை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள From Wikipedia, the free encyclopedia

கந்தரோடை
Remove ads

கந்தரோடை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாசியப்பிட்டி, மல்லாகம் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சுன்னாகம், உடுவில் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்குவேலியும், மேற்கில் சண்டிலிப்பாயும் உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கந்தரோடை Kandarodai, நாடு ...
Thumb
கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்று
Remove ads

வரலாறு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடிருப்புப் பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது[1]. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.[2] அக்காலத்தில் கதிரமலை என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வூரில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கந்தரோடைக் குடியேற்றம் புத்தசமயக் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரிய சான்றுகள் இங்கு காணப்படுவதையும் ஆய்வுகள் காட்டுவதுடன், இப்பகுதியில் அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கிமு இரண்டாவது ஆயிரவாண்டைச் சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[1]

Remove ads

இங்குள்ள பாடசாலைகள்

இங்குள்ள கோவில்கள்

[3]

  • அங்கணம்மைக்கடவை கண்ணகை அம்மன் ஆலயம்
  • அங்கணம்மைக்கடவை மீனாட்சி அம்பாள் ஆலயம்
  • அருளானந்தப் பிள்ளையார் ஆலயம்
  • கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயம்[4]
  • கந்தரோடை வடக்கு நாகதம்பிரான் கோவில்
  • ஓட்டங்கட்டு வைரவர் ஆலயம்
  • காளி கோயில்
  • தம்மளை வைரவர் கோவில்
  • கலட்டி வைரவர் கோவில்

கந்தரோடையைச் சேர்ந்தவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads