கமலேஷ் சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கமலேஷ் சர்மா (Kamalesh Sharma, 30 செப்டம்பர் 1941)[1] 2008ஆம் ஆண்டிலிருந்து பொதுநலவாய நாடுகளின் தற்போதைய மற்றும் 5ஆவது செயலாளர்-நாயகம் ஆவார். இதற்கு முன்னதாக இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையராக (நாட்டுப் பேராளர்) பொறுப்பிலிருந்துள்ளார்.[2]
Remove ads
இளமையும் கல்வியும்
கமலேஷ் சர்மா புது தில்லியின் பராகம்பா சாலையிலுள்ள மாடர்ன் பள்ளியிலும் செயின்ட். இசுடீபன் கல்லூரியிலும் கிங் கல்லூரி, கேம்பிரிச்சிலும் படித்தவர்.[3]
பணி வாழ்வு
1965இலிருந்து 2001 வரை இந்திய வெளிநாட்டுச் சேவையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். தமது அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் ஆகத்து 1997 முதல் மே 2002 வரை இந்தியாவின் நிரந்தரப் பேராளராக பணியாற்றியுள்ளார்.[4] 2002 முதல் 2004 வரை ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பேராளராகப் கிழக்குத் திமோரில் பணியாற்றி உள்ளார். 2004இல் இந்தியாவின் உயர் ஆணையராகப் பிரித்தானியாவிற்கு நியமிக்கப்பட்டார். அரச பொதுநலவாய சமூகத்தின் உதவித் தலைவராக உள்ளார். சூலை 2009 முதல் குயின்சு பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பில் உள்ளார்.[5][6]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads