கம்மம் மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

கம்மம் மாநகராட்சி
Remove ads

கம்மம் மாநகராட்சி என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள கம்மத்தின் ஒரு குடிமை அமைப்பாகும். இது 19 அக்டோபர் 2012 அன்று உருவாக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் கம்மம் மாநகராட்சி, வகை ...
Remove ads

வரலாறு

கம்மம் நகராட்சி 1952 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1959 ஆம் ஆண்டு இரண்டாம் நிலையாகவும், 1980 ஆம் ஆண்டில் முதல் நிலையாகவும் பின்னர் 18 மே 2001 இல் சிறப்பு நிலையாகவும் மேம்படுத்தப்பட்டது [2]

கம்மம் மாநகராட்சிக்கு முதல் நகராட்சி மேயர் திரு. குகுலோத் பபாலால்.

கம்மம் மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் திருமதி. புனுகொள்ளு நீரஜா.

அதிகார வரம்பு

மாநகராட்சி 51 தேர்தல் வார்டுகளுடன் 94.37 km2 (36.44 sq mi) பரப்பளவில் பரவியுள்ளது.[3] 14 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கிராமங்களில், பல்லேபள்ளி, துவம்சலாபுரம், எதுலாபுரம், கொல்லகுடம், குடிமல்லா, குர்ரலபாடு, கைகொண்டைகுடம், கானாபுரம் ஹவேலி, மல்லேமடுகு மற்றும் பெத்ததண்டா, போலேபள்ளி, வெளுகுமட்லா மற்றும் வெங்கடகிரி ஆகியவை அடங்கும்.[4]

நிர்வாகம்

மாநகராட்சி மேயர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சியின் மக்கள் தொகை 1,53,756 ஆகும். மாநகராட்சியின் தற்போதைய மாநகராட்சி ஆணையாளராக ஜி.வேணுகோபால் ரெட்டி உள்ளார்.[5]

தேர்தல்கள்

கம்மம் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் 6 மார்ச் 2016 அன்று நடைபெற்றது.[6] தேர்தலில் 68 சதவீத வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். குடிமை அமைப்பின் 50 பிரிவுகளுக்கு தெ.இரா.ச., தெ.தே.க., இ.தே.கா.-இ.பொ.க. கூட்டணி, இ.பொ.க.(மா.), ஒய். எஸ். ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 291 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மாநகரத்தில் 2,65,710 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்[தெளிவுபடுத்துக]. மார்ச் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.[7]

கம்மம் மாநகராட்சிக்கான தேர்தல் 30 ஏப்ரல் 2021 அன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 60 இடங்களில் தெ.இரா.ச. 43 இடங்களிலும், காங்கிரசு 9 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் இ.பொ.க. 2 இடங்களிலும் இ.பொ.க.(மா.) 3 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.[1]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads