கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையம் (Lighthouse metro station) என்பது சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெட்ரோவின் 4வது பாதையில் உள்ள 30 நிலையங்களில் ஒன்றாகும். இது இப்பாதையில் உள்ள 12 நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இது கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ இடையே உள்ள முனைய நிலையம் ஆகும். இந்த நிலையம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளுக்குச் சேவையாற்றும் நிலையமாகும்.

விரைவான உண்மைகள் கலங்கரைவிளக்கம் மெற்றொ நிலையம்Lighthouse Metro, பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

நிலையத்தின் கட்டுமானம் 2021-ல் தொடங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[1]

கட்டுமானம்

நிலையம்

கலங்கரை விளக்கம் என்பது வழித்தடம் 4-ல் அமைந்துள்ள ஒரு நிலத்தடி மெற்றோ நிலையம். இது தரையிலிருந்து சுமார் 18 முதல் 20 மீட்டர் ஆழத்தில் கட்டப்படும். இது இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராசர் சாலை சந்திப்பில், மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குக் கீழே கட்டப்படுகிறது.[2]

நிலைய அமைப்பு

கலங்கரை விளக்கம் மெற்றோ நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். அதில் ஒன்று கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இருக்கும்.[2]

ஜி தெரு நிலை வெளியேறு/நுழைவு
L1 இடைநிலை கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், பயணச்சீட்டு/ கடைகள்
L2 பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்</img>
தளம் 1



தெற்கு நோக்கி
நோக்கி → பூந்தமல்லி புறவழிச்சாலை அடுத்த நிலையம் பட்டிணப்பாக்கம் மெற்றோ நிலையம்
தளம் 2



வடக்கு நோக்கி
நோக்கி ← லைட்ஹவுஸ் டெர்மினஸ்
பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
L2

பயன்பாடு

2025ஆம் ஆண்டில், பயன்பாட்டிற்கு வரும் கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையத்தை தினமும் சுமார் 5,000 பேர் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads