கல்லூரி தெரு (கொல்கத்தா)

From Wikipedia, the free encyclopedia

கல்லூரி தெரு (கொல்கத்தா)map
Remove ads

கல்லூரி தெரு (College Street) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மத்திய கொல்கத்தாவில் உள்ள 900 மீட்டர் நீளமுள்ள தெருவாகும். இது பிபி கங்குலி தெருவிலிருந்து (போவபஜார்) எம்.ஜி. சாலை வரை (பார்னா பாரிசாய் சந்தை) மருத்துவர் லலித் பாணர்ஜி சரனி குறுக்கு, தெற்கு பவுபஜார் வழியாகக் கல்லூரி சாலையாகவும் நிர்மல் சந்திர வீதி, பார்னா பரிச்சே சந்தையின் வடக்கு, பிதன் சரணியாகவும் மாறுகிறது.[1] [2] இதன் பெயர் இந்த சாலையில் உள்ள பல்வேறு கல்லூரிகளினால் வந்தது (பிரசிடென்சி பல்கலைக்கழகம், சமஸ்கிருத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், சிட்டி வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி). இந்தச் சாலையில் அறிவுசார் செயல்பாடுகளின் மையங்கள் பல உள்ளன. குறிப்பாக இந்தியன் காப்பி விடுதி. இது நகரத்தின் புத்திஜீவிகளை பல தசாப்தங்களாக ஈர்த்துள்ளது.[3] கொல்கத்தாவின் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லூரி வீதியானது இந்தியாவின் மிகப்பெரிய புத்தகச் சந்தையாகும். இது போய் பரா (”புக் டவுண்”) என்ற புனைபெயருடையது.

விரைவான உண்மைகள் கல்லூரி தெரு, பராமரிப்பு : ...
Remove ads

புத்தகக் கடைகள்

கல்லூரித் தெருவில் சிறிய மற்றும் பெரிய புத்தகக் கடைகளுக்காக மிகவும் பிரபலமானது. இது போய் பரா (புத்தக கூட்டமைப்பு) என்ற சிறப்புப்பெயரைக் கொண்டது.[2] [4] கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் புத்தகங்களுக்காக இங்கு வருகிறார்கள். வங்காள மொழி வெளியீட்டு நிறுவனங்கள் (ஆனந்த வெளியீட்டாளர்கள், மித்ரா மற்றும் கோஷ் பதிப்பத்தினர், தாஸ்குப்தா மற்றும் கம்பெனி பிரைவேட் நிறுவனம், டேய்ஸ் பதிப்பகம், ரூபா & கோ., ஆஷா புத்தக நிறுவனம்) இங்கு விற்பனை நிலையங்களை அமைந்துள்ளன. புதிய மற்றும் பழைய புத்தகங்களை விற்கும் எண்ணற்ற மிகச் சிறிய புத்தக நிலையங்கள் இந்த தெருவில் உள்ளன. ஸ்மித்சோனியன் இதழில் ஒரு கட்டுரை கல்லூரித் தெருவை கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளது ... நடைபாதையில் ஒரு அரை மைல் தூரம் புத்தக கடைகள் மற்றும் புத்தகக் நிறுவனங்கள் காணப்படுகின்றன, முதல் பதிப்புகள், துண்டுப்பிரசுரங்கள், ஒவ்வொரு இந்திய மொழியிலும் பேப்பர்பேக்குகளை கொண்டுள்ளது, புத்தகங்களை உள்ளேயும் வெளியேயையும் நியாயமாக பிரான்சு, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் இங்கிலாந்திலிருந்து அச்சிடப்பட்டது. [5] அரிய புத்தகங்களை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம் மற்றும் விரிவான பேரம் பேசலாம்.

Remove ads

அங்கீகாரம்

2007ஆம் ஆண்டில், கல்லூரித் தெரு இந்தியாவின் புகழ்பெற்ற அடையாளங்களில் இடம்பெற்றது. இது மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இதழின் "ஆசியாவின் சிறந்த" பட்டியலில் இடம் பிடித்தது. [6]

கல்வி நிறுவனங்கள்

இந்தத் தெருவில் அமைந்துள்ள நன்கு அறியப்பட்ட கல்வி நிறுவனங்கள்:

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads