கழுகுமலை சமணர் படுகைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கழுகுமலை சமணர் படுக்கைகள்[1] (Kalugumalai Jain beds), தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சமணர் படுகைகள் கோவில்பட்டிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் உள்ளது.
இச்சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (பொ.ஊ. 768–800) அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[2] இங்கு திகம்பர சமணத் துறவிகள் தங்கி, சமண சமயத்தை பரப்பினர்.
இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் பொ.ஊ. 8ம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.
இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத் தொல்லியல் துறை பராமரிக்கிறது.
Remove ads
கல்வெட்டுச் செய்தி
இங்கு வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. அவை பாண்டிய மன்னன் வீரநாராயணன் காலத்தவை. அவற்றில் சமணர் கோயில் திருமேனி செய்ய நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. [3]
இதில் ‘குரத்தி’ சமணப் பெண் துறவியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘குரத்திகள்’ ’குரவடிகள்’ என்னும் சொற்கள் ‘அடிகள்’ [4] என்னும் சொல் பிறந்த பாங்கை உணர்த்துகின்றன.
"செய்வித்த திருமேனி" என்னும் குறிப்புடன் சிலரது பெயர்கள் இக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. [5]
இந்தக் கல்வெட்டுகளில் மாணாக்கன் என்னும் சொல் ‘ஆசிரியரின் மாண்பைப் பெற்றவன்’ என்னும் பொருளில் கையாளப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.
பாகுபலி மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads