பராந்தகப் பாண்டியன்

பாண்டிய அரசன் From Wikipedia, the free encyclopedia

பராந்தகப் பாண்டியன்
Remove ads

பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்[1]. சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.

மேலதிகத் தகவல்கள் பாண்டிய மன்னர்களின் பட்டியல் ...
Remove ads

பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்

கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். சமீபத்தில், நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன[2].

இம்மன்னன், கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது[1].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads