கவுண்டர்பாளையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவுண்டர்பாளையம் (Gounderpalayam ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். திருவள்ளுர் மாவட்டத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இதே பெயரில் ஒரு பகுதி உள்ளது. அதன் அஞ்சல் குறியீட்டு எண் 636113 ஆகும்.[1]
மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சியில் அடங்கியது கவுண்டர்பாளையம் கிராமம். இங்கு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொதுவினியோக அலுவலகம் ஆகியவை உள்ளன.[2]
Remove ads
அமைவிடம்
சென்னையின் வடபகுதியில் மணலி நியூ டவுன் மற்றும் மிஞ்சூர் இடையே கவுண்டர்பாளையம் அமைந்துள்ளது.[3] 2016 ஆம் ஆண்டில், திருவொற்றியூர் பொன்னேரி பஞ்செட்டி நெடுஞ்சாலையில் உள்ள கவுண்டர்பாளையத்தில் உள்ள முக்கிய சாலை, மழைக்காலங்களில் சேதமடைந்து, மோசமான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads