காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் (கௌசிகீசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும் இவ்விரைவர்க்கு கௌசிகீசர் எனும் பெயருமுள்ளது. சோழர் காலத்திய கற்கோயிலாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[3]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
தல வரலாறு
பார்வதிதேவியின் திருமேனியிலிருந்து உதித்த கௌசிகி என்பவள் அன்பினால் வழிபட்ட தலம். இக்கோயிலில் தலவரலாற்றுச் சிற்பங்கள் பெருமளவில் உள்ளன. கோப்பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் கிடைத்துள்ளது.[4]
தல விளக்கம்
கவுசிகேசம், உமாதேவியார் கழித்த கருஞ்சட்டையில் தோன்றிய கவுசிகி பூசித்துப் பெற்ற அருளால் சும்பன் நிசும்பன் என்னும் அசுரரை அழித்துக் காஞ்சியை காவல் செய்யும் பேறு பெற்றனள். இத்தலம் காமாட்சியம்மை கோயிலை அடுத்துப் புறத்தே வடகிழக்கில் உள்ளது.[5]
தல பதிகம்
- பாடல்: (1) (கவுசிகீச்சரம்)
- கரிய வன்பணி கண்ணலிங் கேசனை
- உரிய அன்பின் வழிபடு வோர்உம்பர்
- மருவி வாழ்குவர் மற்றுங் கவுசிகீச்
- சரம்ஒன் றுள்ளது சங்கரன் தானமே.
- பொழிப்புரை: (1)
- கரிய திருமால் வழிபாடு செய்த கண்ணலிங்கேச இறைவனை
- வழிபடற்குரிய அன்பினால் வழிபடுவோர் மேலுலகைத் தலைப்படுவர்.
- மேலும், கவுசி கீச்சரம் என்னும் சிவபிரான் இருக்கை ஒன்றுள்ளது.
- பாடல்: (2)
- வரைஅ ணங்கு வடிவிற் கழிந்தகா
- ருரிவை கோசத் துதித்த கவுசிகி
- இருமை அன்பின் இருத்தி அருச்சனை
- புரியும் பொற்பது மற்றும் புகலுவாம்.
- பொழிப்புரை: (2)
- மலைமகள் வடிவினின்றும் கழிந்த கருஞ்சட்டையி லுதித்த கவுசிகி
- பேரன்பினால் சிவலிங்கம் இருத்தி அருச்சனை புரியும் சிறப்பினது. மேலும்,
- கூறுவோம்.[6]
Remove ads
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில்காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் எதிரில் வடக்குமாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி அபிராமேசுவரர் கோயில் வழியாக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் முகப்பில் சென்று வடக்கில் பார்த்தால் காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒட்டியவாறு கிழக்கு நோக்கும் சன்னிதியாக இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[7]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads