கௌசிகி

From Wikipedia, the free encyclopedia

கௌசிகி
Remove ads

கௌசிகி (Kaushiki) ஒரு இந்து மத தேவி ஆவார். இவர் துர்க்கையின் ஒரு அம்சமாகவும் ஜகன்மாதா பார்வதியிடமிருந்து தோன்றியதாகவும் போற்றப்படுகிறார். இவருக்கு மஹாசரஸ்வதி, அம்பிகை என்றும் பெயர்கள் உண்டு. பார்வதியிடமிருந்து இவர்[1] தோன்றிய நோக்கமே சும்பன் நிசும்பன் என்ற அசுரர்களை வதைக்கவே. பேரகிழயான இவரது அழகை கண்டு அசுரர்களே மயங்கினர். சிம்மவாகினியான இவர் தனது எட்டு கரங்களில் சூலம், சக்கரம், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களை ஏந்தியுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் கௌசிகி, வகை ...
Thumb
பார்வதி தேவியிலிருந்து தோன்றும் கௌசிகி
விரைவான உண்மைகள் கௌசிகி, வேறு பெயர்கள் ...

துர்க்கை மகிசாசுரனை அழித்தப்பின் சிறிது காலத்திற்கு பிறகு இவ்வுலகம் மீண்டும் சும்பன் , நிசும்பன் என்ற அரக்க சகோரதரர்களிடம் சிக்கியது. ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கிய இவ்விருவரும் மற்ற அசுரர்களான சண்டன், முண்டன், இரத்தபீஜன், தூம்ரலோசனன் போன்றவர்களுடன் இணைந்து தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லா உயிர்களையும் கொடுமைப்படுத்தினர். தேவர்களின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து அவர்களை விரட்டி அடித்தனர். அப்போது தேவர்களுக்கு மகிச வதம் முடிந்ததும் துர்க்கா தேவி அவர்களை என்றென்றும் இரட்சிப்பேன் என்று வாக்களித்தது நினைவிற்கு வந்தது. உடனே தேவர்கள் இமய மலைக்கு சென்று அபராஜிதா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து தேவியை தங்களை காப்பாற்றுமாறு பக்தியுடன் வேண்டினர். யாதேவி சர்வ பூதேஷு என்று தொடங்கும் அந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ததும் சிவனின் தேவியான பார்வதியின் மேனியில் இருந்த வெண்மை நிறம் மற்றொரு தேவியின்[2] உருவமாக வெளிவருகிறது. இவரே கௌசிகி தேவி. வெண்மை நிறமான கௌசிகி வெளிவந்ததும் பார்வதியே கருமையாக (காளி) மாறினார்.

அப்போது தேவர்களை பின்தொடர்ந்து வந்த அசுர ஒற்றர்களான சண்டனும் முண்டனும் கௌசிகி தேவியை கண்டனர். உலகையே மயக்கவல்ல​ கௌசிகி துர்க்கையின் பேரெழிலை கண்டதும் உடனே தங்கள் எஜமானர்களிடம் சென்று தேவியின் அழகை வர்ணித்தனர். தேவியை மணக்க எண்ணிய சும்ப நிசும்பர்கள் தங்களை மணந்துக்கொள்ளுமாறு தேவிக்கு தூது அனுப்பினர். கௌசிகியோ யார் தன்னை போரில் தோற்கடிக்கிரார்களோ அவர்களையே மணந்துக்கொள்வதாக பதிலளித்தார்.

தேவியின் பதிலை கேட்டு ஆத்திரம் அடைந்த சும்ப நிசும்பர்கள் தங்கள் படையை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர். கௌசிகி தேவி அனைத்து அசுரப்படைகளை அழித்தார். தூம்ரலோசனனை ஹூம்கார முழக்கமிட்டு எரித்தார். கௌசிகியின் நெற்றியிலிருந்து தோன்றிய காளியே சண்டனையும் முண்டனையும் அழித்தார். அதனாலேயே காளிக்கு சாமுண்டி என்ற பெயர் வந்தது. அதுமட்டுமல்லாமல் போரில் தேவிக்கு உதவ சப்த கன்னியர் தோன்றினர்.

சண்ட முண்டனின் வதம் முடிந்தப்பின் கௌசிகி இரத்தபீஜன் என்ற அசுரனிடம் போர் புரிந்தார். அவனை வெல்வது தேவிக்கு சிறிது கடினமாய் இருந்தது. காரணம் அவனின் உடலிலிருந்து தோன்றும் ஒவ்வொரு இரத்தத்துளிகளிருந்தும் அவனைப் போன்றே பல இரத்தபீஜர்கள் தோன்றினர். உடனே கௌசிகி தேவி காளி தேவியிடம் அவன் உடலிலிருந்து சொட்டும் இரத்தத்தை பூமியில் விழவிடாமல் குடிக்குமாறு ஆணையிட்டார். பிறகு தேவி அவனை எளிதில் மாய்த்தார். சும்ப நிசும்பர்களுக்கு இறுதி வாய்ப்பு தர எண்ணிய கௌசிகி தேவி தேவர்களிடம் இருப்பிடத்தை மீீீண்டும் தேவர்களிடமே கொடுத்து விட்டு யாரையும் துன்புறுத்தாமல் அசுரர்களுக்கு உரிய பாதாள லோகத்திற்கே செல்லுமாறு என்றும் எல்லோருக்கும் மங்களமே அருளும் சிவபெருமானை சும்ப நிசும்பர்களிடம் தூது அனுப்பினார். கணவரான சிவனையே தூது அனுப்பியதால் தேவிக்கு சிவதூதி என்ற பெயர் வந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads