காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் காட்டாங்குளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] காளத்தீசுவரர் இறைவராக வீற்றிருக்கும் இக்கோயிலின் தாயார் ஞானாம்பிகை ஆவார். இக்கோயிலில் தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. நாகர் உருவம் தரித்த இராகு, கேது காட்சியளிக்கின்றனர். இராகு, கேது பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.

விரைவான உண்மைகள் காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12.8114°N 80.0271°E / 12.8114; 80.0271 ஆகும்.

விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3][4]

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads