காட்டுப்பாக்கம், திருவள்ளூர்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டுப்பாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை யின் ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3] இது நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பாக்கம் அமைந்துள்ளது. அருகிலுள்ள பேருந்து நிலையம் காட்டுப்பாக்கத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐயப்பந்தாங்கல் ஆகும். அருகிலுள்ள இரயில் நிலையம் 8 கிலோமீட்டர் தொலைவில் கிண்டியில் உள்ளது. காட்டுப்பாக்கம் நகரானது, மாங்காடு அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மான் கோயில் இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
அடையாளங்கள்
காட்டுப்பாக்கத்தில் பல கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. காட்டுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வட செந்தூர் முருகன் கோயில் நகரத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும்.[4] செந்ததூர்புரம் பிரதான சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் மற்றொரு பழைய கோயிலாகும்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads