காயான் மூரிக் மொழிகள்
ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயான் மூரிக் மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Kayan Murik; ஆங்கிலம்: Kayan Murik Languages; சீனம்: 卡扬-穆里克语言) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு ஆகும்.
காயான் மூரிக் மொழிக்குழுவைச் சார்ந்த மொழிகளை, போர்னியோவில் காயான் மக்கள், மோரேக் பாராம் மக்கள், பகாவ் மக்கள் பேசுகிறார்கள்.
அதே வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் மலையடிவாரத்தில் வாழும் பூர்வீகக் குடிமக்களும் காயான் மூரிக் மொழிக் குழுவைச் சார்ந்த மொழிகளைப் பேசுகிறார்கள்.
Remove ads
காயான் மொழி
மலாய-பொலினீசிய மொழிகளில் காயான்-மூரிக் மொழி துணைப் பிரிவுகளில் ஒன்றான காயான் மொழி, மலேசியா, சரவாக் மாநிலத்தின் காயான் இன மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.
காயான் மொழி உள்ளூர் வணிக மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பகாவ் மொழி பேச்சுவழக்கு மொழிகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
காயான் மக்கள்
காயான் மக்கள் (Kayan People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் வாழும் பழங்குடிகள் மக்களாகும். காயான் மக்கள் தங்களின் அண்டைய பகுதி மக்களான கென்னியா பழங்குடியினரை (Kenyah Tribe) போன்று, ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.[1]
காயான் மக்கள்; அப்போ காயான் மக்கள் (Apo Kayan People) குழுவின் கீழ், மற்றொரு குழு மக்களான பகாவ் மக்கள் (Bahau People) எனும் இனக் குழுவினருடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளனர்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads