காவடிக்காரனூர்

From Wikipedia, the free encyclopedia

காவடிக்காரனூர்map
Remove ads

காவடிகாரனூர் (ஆங்கிலம்:kavadikaranoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு பொருந்திய கிராமமாகும். தங்கயூர் பஞ்சாயத்தின் கீழ் குறிப்பிடப்படும் கிராமங்களில் இது பெரும் நிலபரப்பை கொண்டது. இங்கு பொருளாதாரம் பல்வேறு பரிணாமங்களில் கண்டறியபடுகிறது. இக்கிராமத்தின் வடமேற்கு பகுதியில், பல்வேறு தாது பொருட்கள் அடங்கிய பாறைகள் படிந்துள்ளன.

விரைவான உண்மைகள்
Remove ads

நிலவியல்

காவடிகாரனூர் 11°60′ வ 77°90′ கி, கடற் மட்டத்திலிருந்து 298 மீ உயரத்திலும், சூர்ய மலையின் கிழக்கிலும் அமைந்துள்ளது. சூர்ய மலையில் பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்ததாக இங்குள்ளவர்களால் கூறப்படுகிறது. இதனால்தான் இங்கு மரம், செடி கொடிகள் வளராமல், பயன்படுத்த இயலாத மலையாகக் கருதப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், இங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கதிரியக்க கனிமங்கள் உள்ளதாக அறிவித்தது. ஆசாம்பள்ளி எரியின் நீர் பாசனத்தால் உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன.

Remove ads

அமைவிடம்

கொங்கனாபுரதிலிருந்து 3 கி.மி தென்மேற்கிலும் எடப்பாடியில் (வட்டம்) இருந்து 6 கி.மீ கிழக்கிலும் அமைந்துள்ளது. 12 .35 சதுர பரபளவில், சுமார் 2212 .[4] மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். கோண மோரி (வளைவான சாலை பாலம்) - எனும் இடத்திலிருந்து இரவுநேரத்தில் இடைப்பாடி ஊர் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

பொருளாதாரம்

20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்குள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பினர். மாறிவரும் பொருளாதார முன்னேற்றத்தால் விவசாயம், கனரக வாகனம்(Lorry Heavy trucks), வாகன தொழிற்சாலை, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads