கிராது கோயில்கள்

From Wikipedia, the free encyclopedia

கிராது கோயில்கள்map
Remove ads

கிராது கோயில்கள் (Kiradu temples), மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பார்மேர் நகரத்திற்கு அருகில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 5 கோயில்களின் தொகுப்பாகும். இக்கோயில்கள் 11-12ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களின் ஆளுமைக்குட்பட்ட சோலாங்கி வம்ச சிற்றரசுகளால் நிறுவப்பட்டது. தற்போது இக்கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

விரைவான உண்மைகள் கிராது கோயில்கள், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில்கள் பார்மேர் நகரத்திற்கு மேற்கே 39 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்சல்மேர் நகரத்திற்கு தெற்கே 172 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

கோயில்கள்

தற்போது இக்கோயில்களின் விமானங்கள் மற்றும் மண்டபங்களின் கூரைகள் சிதிலமடைந்துள்ளது. கோயில் தூண்கள் விலங்குகள் மற்றும் மனித சிற்பங்களைக் கொண்டுள்ளது. கோயில் மண்டபங்கள் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்கள் சாளுக்கிய சோலாங்கிகளின் கட்டிட கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.[1]

விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் மண்டபத் தூண்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளது. மூன்று சிவன் கோயில்களின் கருவறைகள் சிதையாமல் உள்ளதுடன், படிக்கிணறும் கொண்டுள்ளது.

Remove ads

வரலாறு

இந்திய வரலாற்று ஆய்வாளர் கௌரிசங்கர் ஹிராசந்த் ஓஜா[2], கிராது கோயில்களின் கிபி 1153-1178 காலத்திய கல்வெட்டுகளின்படி, கிராது கோயில்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக்கருதுகிறார்.[1].

ஆப்கானிய மன்னர் கோரின் முகம்மதுவால், கிராது கோயில்கள் சிதைக்கப்பட்டதும், சாளுக்கிய சோலாங்கிப் பேரரசர் இரண்டாம் பீமன் ஆட்சி காலத்தில் (கிபி 1178ஆம் ஆண்டில்) கிராது கோயில்கள் செப்பனிட்ட செய்திகளை, கிராது கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads