கிருதவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருதவர்மன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன்[1]. மகாபாரதம் தவிர விஷ்ணு புராணம், பாகவதம் மற்றும் அரி வம்சம் போன்ற பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.
குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று யாதவர்களின் நாராயணி சேனைக்கு தலைமை தாங்கி போரிட்டவன்[2]. 18ஆம் நாள் போரின் இரவில் பாண்டவர் பாசறையில் தூங்கிக்கொண்டிருந்த திரௌபதியின் மகன்களான உபபாண்டவர்கள், திருட்டத்துயும்னன், சிகண்டி ஆகியோரை படுகொலை செய்த அசுவத்தாமனுக்கு துணை நின்றவன் கிருதவர்மன். குருச்சேத்திரப் போரில் கௌரவர் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன் கிருதவர்மன். மற்ற இருவர் கிருபர் மற்றும் அசுவத்தாமன் ஆவார். குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் துவாரகைக்கு திரும்பிய கிருதவர்மன், உள்நாட்டுப் போரில் சாத்தியகியால் கொல்லப்பட்டான்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads