கிளிநொச்சி இந்துக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிளிநொச்சி இந்துக் கல்லூரி (Kilinochchi Hindu College) இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சியில் செயந்தி நகரில் உள்ள ஒரு தமிழ் கல்லூரி ஆகும். இது கிளிநொச்சி நகரில் இருந்து கிட்டதட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கல்லூரி 60 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
Remove ads
வரலாறு
இந்த கல்லூரி 1952ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் அரம்பிக்கப்பட்டது. இந்த பாடசாலைக்கான காணியை வே. கந்தையா என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் கமம் பாடசாலைக் காணியாக குலசிங்கம் என்பவரால் பதிவுசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் "இந்து ஆரம்ப வித்தியாலம்" என பெயர் வழங்கப்பட்டது. பாடசாலையின் முதல் ஆசிரியராகவும், அதிபராகவும் கா. நாகலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றார். அதன்பின்னர் 1962ம் ஆண்டு அரசாங்க உதவியின் கீழ் இயங்கும் பாடசாலையாக "இந்து மகாவித்தியாலயம்" என மாற்றம் பெற்றது. 1968ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இப்பாடசாலையில் இருந்து தோற்றினர். 1979ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு அ. கைலாயபிள்ளை அவர்களின் முன்னெடுப்பால் "கிளிநொச்சி இந்துக் கல்லூரி" என பெயர்பெற்றது.[1]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads