கிழக்கு அரைக்கோளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere) என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும்.[1] இந்நிலப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன. இதன் எதிரிடையான மேற்கு அரைக்கோளத்தில் இரு அமெரிக்காக்கள் உள்ளன. தவிர இப்பகுதி பண்பாடு மற்றும் அரசியல் புவியியலில் 'பழைய உலகம்' என அழைக்கப்படுகிறது.


Remove ads
மேல் விவரம்
நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு,மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா ,ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது.[2][3] இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளடங்குகிறது. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி சேர்க்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் நீக்கப்படுகின்றன.
அண்டார்டிக்காவின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது கிழக்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
பிற பக்கங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads