குசராத்து கடல்சார் பல்கலைக்கழகம்
இந்தியப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குசராத்து கடல்சார் பல்கலைக்கழகம் (Gujarat Maritime University) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். காந்திநகரில் உள்ள குசராத்து தேசிய சட்டக்கல்லூரி வளாகத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. குசராத்து கடல்சார் வாரிய கல்வி அறக்கட்டளையால் 2017 ஆம் ஆண்டு குசராத் தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டத்தின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1]
பல்கலைக்கழக மானியக் குழு குசராத்து கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடல்சார் சட்டம் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டம் பாடங்களில் முதுநிலை ஓராண்டு சட்டப்படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.[2]
Remove ads
குறிக்கோள்
குஜராத் கடல்சார் பல்கலைக்கழகத்தின் பிரதான நோக்கம் கடல்சார் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முறை பயிற்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உலகளாவிய மையமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கடல்சார் தொழிலின் மனித மூலதனம் மற்றும் திறனை மேம்படுத்துவதையும் அதிகரிப்பதையும் இப்பல்கலைக்கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் களத்தில் படித்த மற்றும் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்களை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய கடல் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதும் இதன் விருப்பமாகும்.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads