குராசான் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குராசான் (Persian: استان خراسان [xoɾɒːˈsɒːn] (கேட்க)) என்பது வடகிழக்கு ஈரானில் இருந்த மாகாணம் ஆகும். இது எலனிய மற்றும் பார்த்தியக் காலங்களில் திராக்சியான் என்று அழைக்கப்பட்டது. ஆனால் குராசான் என்ற சொல்லானது வரலாற்று ரீதியாக ஒரு பெரிய பகுதியைக் குறிக்கக் கூடியதாகும். அப்பகுதி அகாமனிசியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. குராசான் என்ற பாரசீகச் சொல்லுக்கு "சூரியன் எங்கிருந்து வருகிறது" என்று பொருள்.[1] முதன்முதலில் இப்பெயரானது சாசானியப் பேரரசின் ஆட்சியின்போது பாரசீகத்தின் கிழக்கு மாகாணத்துக்குக் கொடுக்கப்பட்டது.[2] நடுக் காலத்தின் பிற்பகுதி முதல் அண்டைப் பகுதியான திரான்சாக்சியானாவில் இருந்து வேறுபடுத்தி அறிவதற்காக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.[3][4][5]

இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் சியா இசுலாமைப் பின்பற்றக்கூடிய முசுலிம்கள் ஆவர்.[6] இந்த மாகாணம் வரலாற்றுரீதியான பெரிய குராசான் பகுதியின் மேற்குப் பாதியைக் கொண்டிருந்தது.[7] ஈரானிய மாகாணமான குராசானின் நவீன எல்லைகள் அதிகாரபூர்வமாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரையறுக்கப்பட்டன.[8] இம்மாகாணமானது 2004ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.[9]

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads