குவா நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவா அல்லது குவா நகரம் (மலாய்: Bandar Kuah; ஆங்கிலம்: Kuah அல்லது Kuah Town; சீனம்: 镇肉汁) மலேசியா, கெடா மாநிலத்தில், லங்காவி மாவட்டத்தில் (Langkawi District), லங்காவி மக்களவை தொகுதியில் (Langkawi Federal Constituency) அமைந்துள்ள ஒரு சுற்றுலா நகரம்.
தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் (Mainland of Malaya) இருந்து அல்லது பினாங்கு தீவில் (Penang Island) இருந்து படகு மூலம் வரும் மக்களுக்கு இது நுழைவு இடமாகும் (Entry Point). இந்த நகரம் லங்காவியின் தலைநகரமாகவும் விளங்குகிறது.
Remove ads
பொது
குவா நகரம் அதன் படகுத் துறையை (Jetty) மையமாகக் கொண்டது. மற்றும் பெருநிலப் பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான நுழைவாயில் இடமாகவும் திகழ்கின்றது. லங்காவி தீவிற்கு (Langkawi Island) வருகை தருபவர்கள் இந்த இடத்தில் இருந்துதான் தங்களின் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
1986-ஆம் ஆண்டு தொடங்கி லங்காவி ஒரு சுற்றுலா மையமாக (Tourist Centre) வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக தற்போது குவா நகரம் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக மாறியுள்ளது.[2]
வரியில்லா தகுதி
வரியில்லா தகுதி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, குவா நகரம் மாற்றம் அடைந்து ஒரு சிறிய நகரமாக வளர்ந்துள்ளது. 1987-க்கு முன், குவாவில் மட்டுமே இரவில் தங்குவதற்கான இடங்கள் இருந்தன.[3]
குவாவின் மையத்தில் சில பழங்காலக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் தீர்வை இல்லாத (Tax-Free) மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களை வாங்கலாம்.[3]
கடல் உணவு உணவகங்கள்
குவாவில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நகரம் கடற்கரை ஓரமாக இருந்தாலும் சரியான கடற்கரை இல்லாததால், உல்லாச விடுதிகள் (Resorts) இல்லை. குவாவின் இரவு வாழ்க்கை பெரும்பாலும் கடல் உணவு உணவகங்களை (Seafood Restaurants) மையமாகக் கொண்டது.
குவாவில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. லங்காவியின் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு குவா நகர்ம் ஒரு மையப் புள்ளியாக விளங்குகிறது. இன்றைய நிலையில் குவா நகரம்; வணிக வளாகங்கள், உணவகங்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள் (Fast Food Outlets), ஓட்டல்கள் மற்றும் கைவினைப்பொருள் கடைகள் (Handicraft Shops) ஆகியவற்றைக் கொண்ட வணிக மையமாக உள்ளது.[2]
Remove ads
லங்காவி
லங்காவி (Langkawi) கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம். இது ஒரு தீவு; ஒரு நகரம்; ஒரு மாவட்டம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[4]
தீவுக் குழுமம்
இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.
லங்காவி தீவு கெடாவின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். குவா அதன் பெரிய நகரமாக உள்ளது. லங்காவிக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பந்தாய் செனாங் (Pantai Cenang) தீவு, மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதியாகும்.
தூபா தீவு
இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவி தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவி தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.[5][6]
மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் குவா ஆகும். லங்காவி தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.[7]
Remove ads
தட்ப வெப்ப நிலை
குவா நகரம் சம தட்ப வெப்ப நிலையைக் கொண்ட ஓர் இடமாகும். ஆண்டுக்கு 2,400 மி.மீ. (94 அங்) மழை பெய்கிறது. டிசம்பர் மாத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் வரட்சியான காலம். மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையில் நீண்ட மழைக் காலம். ஆகஸ்டு மாதத்தில் அதிகமாக மழை பெய்கிறது.
Remove ads
குவா காட்சியகம்
மேற்கோள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads