கெனாங்கா பேரங்காடி
மலேசியா, கோலாலம்பூரில் உள்ள கடைவலக் கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெனாங்கா பேரங்காடி அல்லது கெனாங்கா வோல்சேல் சிட்டி (ஆங்கிலம்: Kenanga Wholesale City அல்லது KWC Fashion Mall) என்பது மலேசியாவில்; அலங்காரப் பொருட்களின் முதல் விற்பனை பேரங்காடி ஆகும்.[3] இது கோலாலம்பூரின் மையப்பகுதியான புடுவில், மாநகர் தங்க முக்கோணத்தில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில், கெனாங்கா சாலை மொத்த விற்பனை வளாகத்தில் அமைந்துள்ளது.[2] இந்தப் பேரங்காடியில் மொத்தம் 800 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.[3]
கெனாங்கா பேரங்காடியில் 500,000 சதுர அடி (46,000 மீ2) கொண்ட பகுதி, நிகர வாடகைக்கு விடக்கூடிய இடம் உள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள்; மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன; மற்றும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் ஆடைகள், அணிகலன்கள், காலணிகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.
Remove ads
பொது
கோலாலம்பூர் மாநகரில் வாழும் பொதுமக்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா இடம் என மலேசிய சுற்றுலாத் துறை (Tourism Malaysia) கெனாங்கா பேரங்காடியை அங்கீகரித்துள்ளது.[4] கெனாங்கா பேரங்காடியின் திறப்பு விழா 2012 மே 26 அன்று நடைபெற்றது,
அணுகல்
தொடருந்து நிலையங்கள்
கெனாங்கா பேரங்காடிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம்:
- AG9 SP9 MR4 ஆங் துவா நிலையம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads