கெனிங்காவு மாவட்டம்

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கெனிங்காவு மாவட்டம்map
Remove ads

கெனிங்காவு மாவட்டம் அல்லது கெனிங்காவ் மாவட்டம் (மலாய்: Daerah Keningau; ஆங்கிலம்: Keningau District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். அதே வேளையில் கெனிங்காவ் (Keningau Town) நகரம், கெனிங்காவ் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கெனிங்காவ் மாவட்டம் Keningau DistrictDaerah Keningau, நாடு ...

சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. சபா மாநிலத்தின் பரப்பளவில் 24.9%; அதாவது 18,298 சதுர கி.மீ.; சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 14.7% கொண்டு உள்ளது. உட்பகுதி பிரிவில் உள்ள மிகப் பெரிய நகரம் கெனிங்காவ்.

உட்பகுதி பிரிவில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள்:

இந்தப் பிரிவின் கரையோரப் பகுதிகளில் டூசுன், மூருட்டு, பிசயா மக்கள், புரூணை மலாய்க்காரர்கள் மற்றும் கெடயான் (Kedayan) இனத்தவர் சற்றே அதிகமாக உள்ளனர்.[2]

Remove ads

பொது

சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

கெனிங்காவ் மாவட்டம் 3,533 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மேற்கில் குரோக்கர் தேசியப் பூங்கா (Crocker Range); மற்றும் தென் கிழக்கில் துருஸ்மாடி மலையும் (Mount Trus Madi) எல்லைகளாக உள்ளன.

Remove ads

சொற்பிறப்பியல்

கெனிங்காவு நிலப்பகுதியில் ஏராளமான ஜாவானிய இலவங்கப்பட்டை மரங்கள் (Cinnamomum burmannii) உள்ளன. இந்த மரங்கள் உள்நாட்டில் கொனிங்காவ் (Koningau) என்று அழைக்கப் படுகின்றது. அந்த மரங்களில் இருந்து இந்தப் பகுதிக்கும் பெயர் வந்தததாகச் சொல்லப் படுகிறது.[4]

வரலாறு

கெனிங்காவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo) மிக முக்கியமான நிர்வாக மையங்களில் ஒன்றாக விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, வடக்கு போர்னியோவை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த காலக் கட்டத்தில், கெனிங்காவ் நகரத்தைத் தங்களின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்தக் காலக் கட்டத்தில், கெனிங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட இலவங்கப்பட்டை தெனோம் நகரில் இருந்து இரயில் வண்டி வழியாக ஜெசல்டன் (தற்சமயம்: கோத்தா கினபாலு) கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டது, பின்னர் அங்கு இருந்து ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது.[5]

அபின்-அபின் (Apin-Apin) அருகே உள்ள நுந்துனான் (Nuntunan) கிராமம் பிரித்தானிய நிர்வாகத்தின் போது "44" எனும் எண்ணில் அறியப்பட்டது. தெனோம் (Nuntunan) நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இருந்ததால் அந்த அழைப்பு எண் வழங்கப்பட்டது.

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

மேலும் காண்க

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads