கேசவ தேவ் கோயில்

From Wikipedia, the free encyclopedia

கேசவ தேவ் கோயில்map
Remove ads

கேசவ தேவ் கோயில் (Keshav Dev Temple) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அமைந்துள்ளது.[1][2] முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுராவில் அமைந்த கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக கேசவ தேவ் விளங்குகிறார்.

விரைவான உண்மைகள் கேசவ தேவ் கோயில், ஆள்கூறுகள்: ...
Thumb
கோபியர்கள் புடைசூழ இராதை (வலது) - கிருஷ்ணர் (இடது)
Thumb
மதுரா கிருஷ்ணர் கோயிலின் நுழைவாயில்

இக்கோயிலில் ஹோலி பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகிறது.

Remove ads

வரலாறு

Thumb
கேசவ தேவ் கோயில் அருகே மசூதி (மையத்தில்) மற்றும் கிருஷ்ண ஜென்மபூமி (இடது கீழ்புறம்)

இந்து தொன்மவியலின் படி, இக்கோயிலை கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் நிறுவியதாக கருதப்படுகிறது.[3] பொ.ஊ. 400-இல் குப்தப் பேரரசின் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் சிறிதாக இருந்த கேசவ தேவ் கோயிலை பெரிதாக நிறுவினார். பின்னர் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா நாட்டு ராஜ்புத்திர மன்னர் வீர் சிங் கேசவ தேவ் கோயிலை சீரமைத்து கட்டியதாக கருதப்படுகிறார்.

கேசவ தேவ் கோயில் பொ.ஊ. 1017-இல் கஜினி முகமதுவால் சிதைக்கப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் சைதன்ய மகாபிரபு கேசவ தேவ் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த போது, சிக்கந்தர் லோதியால் கேசவ தேவ் கோயில் இடிக்கப்பட்டதாக கூறியுள்ளார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா நாட்டு ராஜ்புத்திர மன்னர் வீர் சிங், கேசவ தேவ் கோயிலை சீரமைத்து கட்டினார். 1699-இல் அவுரங்கசீப் கட்டளையின் படி கேசவ தேவ் கோயில் இடித்துத் தள்ளப்பட்டது.

1944-இல் மதன் மோகன் மாளவியா கேசவ தேவ் கோயிலைப் புதுப்பித்துக் கட்ட முயன்றார். ஆனால் மாளாவியா இறந்து விட, பிர்லா குடும்பத்தின் அறக்கட்டளை நிதியுதவியுடன் 1951-இல் கேசவ தேவ் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads