கேடிஎம் இண்டர்சிட்டி

From Wikipedia, the free encyclopedia

கேடிஎம் இண்டர்சிட்டி
Remove ads

மலாயா நகரிடை தொடருந்து (மலாய்: KTM Antarabandar; ஆங்கிலம்: KTM Intercity); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளை வழங்கும் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (மலாய்: Keretapi Tanah Melayu Berhad ஆங்கிலம்: Malayan Railways Limited) (KTMB) எனும் அரசு சாரா நிறுவனத்தினால் நடத்தப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் மலாயா நகரிடை தொடருந்து KTM Intercity KTM Antarabandar, பொது தகவல் ...

நகரிடை தொடருந்து சேவைகளில் ஒன்றான மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் வழியாக; (East Coast Line) தும்பாட் தொடங்கி கிம்மாஸ் வழியாக ஜொகூர் பாரு சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழித்தடத்தில் (West Coast Line) பாடாங் பெசார் தொடருந்து நிலையம் தொடங்கி கிம்மாஸ் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சேவைகள் இருந்தன. அவை தற்போது மலாயா மின்சார தொடருந்து சேவை (KTM ETS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Remove ads

பொது

மலாயா நகரிடை தொடருந்து நீண்ட காலமாக மிதமான வெற்றியை அனுபவித்து வருகிறது. ஆனாலும் சாலை மற்றும் விமானப் பயணங்களுடன் அதிக அளவில் போட்டியை எதிர்கொள்கிறது.

ஏனெனில் மலேசிய விரைவுச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் எண்ணிக்கையில் அதிக அளவில் அதிகரித்து விட்டன. மலேசியர்கள் பெரும்பாலோர் விரைவுச்சாலைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.[2]

மேலும் மலிவு விலையில் விமான நிறுவனங்கள் குறுகிய பயண நேரத்தை வழங்குகின்றன. குறைந்த விலை - குறைந்த நேரம் எனும் அடைமொழியுடன் உள்ளூர் விமானச் சேவைகள் துரிதமான சேவைகளை வழங்கி வருகின்றன. இதனால் மலாயா நகரிடை தொடருந்தின் அமைப்பு, அண்மைய காலங்களில் உள்ளூர் விமான நிறுவனங்களுடன் பலத்த போட்டிகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads