மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்

From Wikipedia, the free encyclopedia

மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
Remove ads

மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம், (மலாய்: Laluan Kereta Api Pantai Timur; ஆங்கிலம்: KTM East Coast Railway Line (ECRL); சீனம்: 东海岸铁路线); என்பது மலேசியா கிளாந்தான் மாநிலத்தில் உள்ள தும்பாட் தொடருந்து நிலையத்திற்கும் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கிம்மாஸ் தொடருந்து நிலையத்திற்கும் இடையிலான தொடருந்து வழித்தடம் ஆகும்.

விரைவான உண்மைகள் மலாயா கிழக்கு கடற்கரைதொடருந்து வழித்தடம் KTM East Coast Railway Line, கண்ணோட்டம் ...
கிழக்கு
கடற்கரை வழித்தடம்
தும்பாட் கிடங்கு
தும்பாட்
கம்போங் கோக் பாசீர்
பாலேக் பாங்
வாக்காப் பாரு
பூனுட் சூசு
கம்போங் மாச்சாங்
தாய்லாந்து தொடருந்து
ரந்தாவ் பாஞ்சாங்
குவால் பெரியோக்
ரெப்பேக்
பாசீர் மாஸ்
பாசீர் மாஸ் சந்திப்பு
சிக்கா திங்கி
தோ உபான்
சுங்கை கெலாடி
புக்கிட் பானாவ்
தானா மேரா
கம்போங் பாலோ ராவா
குயில்மார்ட் பாலம்
தெமாங்கான்
சுங்கை நால்
கோலா கிராய் கிடங்கு
கோலா கிராய்
பாகி
மானேக் உராய்
கம்போங் பாரு
சுங்கை மெங்குவாங்
உலு தெமியாங்
உலாக்
ஜெராம்
கம்போங் பாரு புக்கிட் அபு
புக்கிட் அபு
கோலா கிரிசு
தாபோங்
கெமுபு
செரி ஜெயா
செரி மாளிகை
செரி பிந்தாங்
சுங்கை தாசின்
ஜெரேக் பாரு
பெர்த்தாம்
பெர்த்தாம் பாரு
லீமாவ் கஸ்தூரி
சுங்கை செரியான்
கம்போங் சுங்கை செரியான்
சுங்கை கோயான்
பான் மலாயன்
குவா மூசாங் கிடங்கு
குவா மூசாங்
லாப்பான் துப்பாய்
மந்தாரா பாரு
மெராப்போ
தெலுக் குனோங்
குபாங் ராசா
சுங்கை தெமாவ்
செகார் பேரா
அவுர் காடிங்
துரா
கம்போங் பெர்க்காம்
புக்கிட் பெத்தோங்
தெலாங்
பாடாங் தெங்கு
கோலா லிப்பிஸ் கிடங்கு
கோலா லிப்பிஸ்
கெராம்பிட்
மேலா
ஜெராண்டுட் நிறுத்துமிடம்
ஜெராண்டுட்
ஜெண்டேராக்
கோலா குராவ்
கெர்டாவ்
மெந்தகாப் கிடங்கு
மெந்தகாப்
சுங்கை பெலுங்கு
பெலுங்கு
மெங்காராக்
திரியாங்
கெமாயான்
சுங்கை லூய்
ஆயர் ஈத்தாம்
கோலா பிலா (முடிவு: 1931)
பகாவ் சந்திப்பு
பகாவ்
ஜொங்காட்
ரொம்பின்
லொண்டா
கிம்மாஸ் சந்திப்பு │ கிம்மாஸ்  ETS 

Left arrow மேற்கு கடற்கரை வழித்தடம் Right arrow

கிம்மாஸ் தொடருந்து நிலையம் என்பது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்திற்கும் (West Coast Line); தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரை தொடருந்து வழித்தடத்திற்கும் (East Coast Railway Line) இடையிலான தொடருந்து சந்திப்பு நிலையமாக அமைகிறது.

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்திற்கு பெயர் வைத்தது போல இந்த வழித்தடத்திற்கும் மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

Remove ads

பொது

மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம், தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களான பகாங் மற்றும் கிளாந்தான் மாநிலங்களுக்குச் சேவை செய்கிறது. உண்மையில், இந்த வழித்தடம் கடற்கரையோரங்களில் செல்வது இல்லை. தும்பாட் தொடருந்து நிலையத்தை அடைந்த போது மட்டுமே தென்சீனக் கடலை சந்திக்கிறது.

தும்பாட் தொடருந்து நிலையத்தை அடையும் வரையில், இந்த வழித்தடம், பெரும்பாலும் அடர்ந்த காடுகளின் ஊடாகவே செல்கிறது. இதனால் இதற்கு வனத் தொடருந்து (Jungle Railway) என்ற புனைப்பெயரும் உண்டு. தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்களில் திராங்கானு மாநிலம் மட்டுமே தொடரந்து சேவைகளின் மூலம் இணைக்கப்படாத ஒரே மாநிலம் ஆகும்.[1]

Remove ads

வரலாறு

Thumb
கிம்மாஸ் தொடருந்து நிலையத்திற்கு வடக்கில், மேற்கு கடற்கரை வழித்தடமும் (இடது புறம்); கிழக்கு கடற்கரை வழித்தடமும் (வலது புறம்) சந்திக்கும் இடம்

2010-ஆம் ஆண்டில் மலாயா தொடருந்து நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அதிவேக கேடிஎம் இண்டர்சிட்டி சேவையான கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) சேவைக்கு வழி வகுக்கும் வகையில் மேற்குக் கடற்கரைப் பாதையின் பெரும்பகுதி இரட்டை வழித்தடங்களாக மின்மயமாக்கப்பட்டது.

22 டிசம்பர் 2014-இல் கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தாக்கிய பெருவெள்ளம் காரணமாக கிழக்கு கடற்கரை தொடருந்து பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அந்த வெள்ளத்தினால் தொடருந்து பாதையின் உள்கட்டமைப்பு, சமிக்கை கருவிகள் மற்றும் போக்குவரத்து பராமரிப்பு தளவாடங்கள் போன்றவற்றின் பெரும்பகுதிகள் நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தன.

மலேசிய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு

ஆகத்து 2020-இல், கிழக்குக் கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் RM 874.7 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. 2021-க்குள் தொடருந்து சேவை மீண்டும் தொடக்கப்படும் என்று அறிவித்தது.[2]

12 ஏப்ரல் 2021-இல், மலாயா தொடருந்து நிறுவனம் அதன் கேடிஎம் வகுப்பு 61 எனும் டீசல் மல்டிபிள் யூனிட் (Diesel Multiple Unit - DMU) தொடருந்துகளை கிளாந்தான் மற்றும் பகாங் மாநிலங்களுக்கு இடையே கிழக்குக் கடற்கரைப் பாதையில் அறிமுகப்படுத்தியது.

புது ரக தொடருந்துகள்

தும்பாட் மற்றும் கோலா லிப்பிஸ் நகரங்களுக்கு இடையே கேடிஎம் இண்டர்சிட்டி இணைப்பிற்கு; வழக்கமான டீசல் தொடருந்துகளுக்குப் பதிலாக புது ரக தொடருந்துகளை அறிமுகப்படுத்தியது.

புது ரக தொடருந்துகளின் சராசரி வேகம் மணிக்கு 100 கி.மீ.; அதனால் அந்தப் பயன்பாடு பயண நேரத்தைக் குறைத்துள்ளது. வழக்கமான தொடருந்துகள் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் இயங்கி வந்தன.[3]

Remove ads

சேவைகள்

கிழக்கு கடற்கரை தொடருந்து வழிதடத்தின் சேவைகள்:

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads