கேண்டெலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேண்டெலா (candela, /kænˈdɛlə/ அல்லது /kænˈdiːlə/; குறியீடு: cd, கேண்டே) என்பது ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கான அனைத்துலக அலகு ஆகும். இது ஒருக் குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலைக் குறிக்கும் அளவாகும்.
candela என்பது இலத்தீன் மொழியில் மெழுகுவர்த்தி எனப் பொருள். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுதிரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்.[2].
Remove ads
வரையறை
எல்லா அனைத்துலக முறை அலகுகள் முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
- ஒரு கேண்டெலா என்னும் ஒளியடர்த்தியானது, 540×1012 எர்ட்சு அதிர்வெண் கொண்ட ஒற்றை நிற ஒளி, ஒரு குறிப்பிட்டத் திசையில் 1/683 வாட்/இசுட்டெரேடியன் வீசும் கதிர்வீச்சு அடர்த்தி ஆகும். (இசுட்டெரேடியன் என்பது திண்மக் கோண ஆரையம்/ரேடியன் ஆகும்)
ஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.
Remove ads
அனைத்துலக முறை அலகுகள் ஒளி அலகுகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads