கைமூர் வனவிலங்கு காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைமூர் வனவிலங்கு காப்பகம் (Kaimoor Wildlife Sanctuary) என்பது தென்கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகம் ஆகும்.[1] இந்தக் காப்பகம் பொதுவாகக் கிழக்கு மற்றும் மேற்கில் கைமூர் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் சோன் ஆறுயும் மேற்கத்திய முனையில் மத்தியப் பிரதேசத்தின் எல்லை வரையும் நீண்டுள்ளது. இது 1982இல் நிறுவப்பட்டது.[2]
இங்கு 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் பசுமையான தாவரங்கள் உள்ள நிலத்தைக் கொண்டுள்ளன. இப்பகுதியின் நிலப்பரப்பு இது இங்கு வசிக்கும் விலங்குகளின் வகைகளைப் போலவே மாறுபட்டது.
Remove ads
அணுகல்
வானூர்தி மூலம்
கைமூர் வனவிலங்கு காப்பகம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் வாரணாசியில் உள்ளது.
தொடருந்து மூலம்
கைமூர் வனவிலங்கு காப்பகம் அருகிலுள்ள தொடருந்து நிலையம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொடருந்து நிலையமாகும்.
சாலை வழியாக
வாரணாசி மற்றும் மிர்சாபூரிலிருந்து (100 கி. மீ.) சாலை வழியாக கைமூரை அணுகலாம். கைமூர் அருகிலுள்ள நகரமான இராபர்ட்சுகஞ்ச் 3 கி. மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி முக்கிய நகரங்களுடன் பேருந்து சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
சுற்றுலா இடங்கள்
கைமூர் வனவிலங்கு காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளில் சிறுத்தை, புல்வாய், புள்ளி மான், இந்தியச் சிறுமான், தேன் கரடி, மயில் ஆகியவை அடங்கும்..சரணாலயத்தில் காணப்படும் முக்கிய காட்டு விலங்குகளாக மான், நீலக் காளை, காட்டுப் பூனை, கரக்கல் ஆகும்.[3]
முக்கிய தாவரங்களில் சால், சீசம் தேக்கு, மகுவா, நாவல், சித்தா, சாலாய், கோரையா மற்றும் ஜீங்கர் ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads