கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1991 கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (Kokkadichcholai massacre) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை என்ற ஊரில் தமிழ் மக்கள் மீது 1991 சூன் 12 அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[2][3] இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவ்றி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. கொழும்பில் நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.[4][5][6][7]
Remove ads
பின்னணித் தகவல்
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையாக தமிழரும், சிறுபான்மை இனக்களாக சோனகர், சிங்களவர், பரங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர். 1980களின் ஆரம்பம் முதல் 1990களின் ஆரம்பம் வரை ஏறத்தாழ 1,100 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.[8] கொக்கட்டிச்சோலை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 1987, 1991 இல் நடந்த படுகொலைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.[6]
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads