கொடநாடு, கேரளம்

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

கொடநாடு, கேரளம்map
Remove ads

கொடநாடு (Kodanad) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆற்றங்கரை கிராமமாகும். இந்த ஊரானது கொச்சிக்கு கிழக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் பெரியார் ஆற்றின் தென் கரையில் பெரும்பாவுக்கு அருகே உள்ள உயர்ந்த மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள விமான கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும், இது சாலை மார்கமாக சுமார் 20 கி.மீ. (12   mi) தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் யானைகள் பயிற்சி மையம் இருப்பதால் இந்த கிராமம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

Thumb
கோடநாடு கிராமப்புறத்திலிந்து காட்சி
விரைவான உண்மைகள் கொடநாடு, நாடு ...
Remove ads

அமைவிடம்

போக்குவரத்து

கொடநாடு ஊருக்கு எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள இடங்களிலிருந்தும் அண்டை நகரங்களிலிருந்தும் தனியார் பேருந்து வசதியைக் கொண்டுள்ளது. இங்கிருந்து பெரம்பவூருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கபடுகின்றன. பொதுவாக சிறிய தொலைவுக்கு பயணிக்க தானிகள் பயன்படுத்தப்படுகின்றன. அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் அங்கமாலி மற்றும் அலுவா ஆகும். நெடும்பசேரியில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் கொடநாடு யானை பயிற்சி மையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. KL-40 என்பது குன்னத்துநாடு வட்டம் மற்றும் பெருமம்பாவூருக்கான வாகனப் பதிவு குறியீடாகும்.

Remove ads

கொடநாடு யானைகள் பயிற்சிமையம்

கேரளத்தின் பெரிய யானைகள் பயிற்சி மையத்தில் குறிப்பிடத்தக்கது கொடநாடு பயிற்சி மையம் ஆகும். துவக்கத்தில் மலையாற்றூர் காடுகளில் பிடிக்கபட்ட யானைகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கபட்டது. இந்நிலையில் யானைகள் பிடிப்பது சட்டப்பூர்வமாக தடை செய்யபட்டுள்ளதால், தற்போது கொடநாடு வெறும் பயிற்சி மையமாக செயல்படுகிறது.

கப்ரிக்காடு சூழலியல் சுற்றுலா திட்டம்

இந்திய அரசால் நிதியளிக்கப்படும் சூழலியல் சுற்றுலா திட்டப் பட்டியலில் கொடநாடு உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கொடநாட்டை ஒட்டி ஆற்றங்கரையில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கப்ரிக்காடு என்ற கிராமம் 2006 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகளை இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த முறையில் மகிழ்விப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

அபய ஆரண்யம் சிறு மிருகக்காட்சி சாலை, கப்ரிக்காடு

200 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இயற்கை வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக, அபயாரண்யம் என்ற பெயரிலான ஒரு பகுதி உருவாக்கபட்டுள்ளது. இதில் கொடநாடு யானைகள் மையத்திலிருந்த யானைகள் உட்பட பெரும்பாலான விலங்குகள் அண்மையில் கப்ரிக்காடிற்கு மறுவாழ்வுக்கு அனுப்பப்பட்டன. இந்த திட்டத்தை 18 பிப்ரவரி, 2011 அன்று வனத்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சர் திரு. பினாய் விஸ்வோம் துவக்கிவைத்தார். இங்கு புள்ளி மான்கள், கடமான்கள், யானைக்குட்டிகளைக் காணலாம்.[1] இந்த அபயரண்யம் பெரியாறு ஆற்றின் கரையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.[2]

Remove ads

வழிபாட்டுத் தலங்கள்

கோயில்கள்
  • கொடநாடு சிவன் கோயில்,
  • செட்டிநாடு சரஸ்வதி கோயில்,
  • குன்னும்புரம் ஐயப்பன் கோயில்,
  • இடவங்காவு கோயில்,
  • பஞ்சேஸ்வர விஷ்ணு கோயில்.
தேவாலயங்கள்
  • புனித அந்தோணி சிரோ-மலபார் தேவாலயம், கொடநாடு
  • புனித தோமா தேவாலயம், மலையாற்றூர் (2   கி.மீ)
  • பெத்லஹேம் புனித மேரி யாக்கோபைட் சிரிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம், அலட்டுச்சிரா

அருகிலுள்ள இடங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads