கொடும்பாளூர்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொடும்பாளூர் (Kodumbalur) என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். இந்த ஊர் சங்க கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற தொன்மைப் புகழ்மிக்க ஊர் ஆகும். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
கொடும்பாளூர் கற்றளிகள்
மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வரலாற்று சிறப்புக் கொண்ட கற்கோவில்களைக் கொண்டது கொடும்பாளூர். இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல நினைவுச்சின்னங்கள் இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று மூவர் கோயில் மற்றொன்று முசுகுந்தேஸ்வரர் கோயில். மேலும் ஐவர் கோயில் இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு சிவன் கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோயில். இந்தக் கோயில்கள் பிற்காலச் சோழர்களின் கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன. முக்கியமாகக் கருதப்படும் கல்வெட்டுக்களும் இங்கே காணக்கிடைக்கின்றன.[1]
Remove ads
செல்லும் வழி
கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி- மதுரை சாலையில் அமைந்துள்ளது. வேகப்பேருந்துகள் நிற்காமல் செல்லலாம். அதனால் விராலிமலையில் இறங்கி நகரப்பேரூந்துகள் மூலம் கொடும்பாளூர் வந்து சேரலாம்.
புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளன. அவற்றில் ஏறினால் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடும்பாளூர். (மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர்). அல்லது புதுக்கோட்டையிலிருந்து விராலிமலையை அடைந்து, அங்கிருந்து நகரப்பேரூந்துகளைப் பிடிக்கலாம்.
Remove ads
நாவல்களில் கொடும்பாளூர்
- கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மனின் (முதலாம் ராஜராஜ சோழன்) மனைவியாக வரும் வானதி கொடும்பாளூரை சேர்ந்தவர் ஆவார்.
- பொன்னியின் செல்வனுக்கு தொடர்ச்சியாக எழுதப்பட்ட காவிரி மைந்தன் நாவலிலும் வானதியின் பிறப்பிடமான கொடும்பாளூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அகிலனின் வேங்கையின் மைந்தன் நாவலில் கொடும்பாளூரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads