விராலிமலை

From Wikipedia, the free encyclopedia

விராலிமலைmap
Remove ads

விராலிமலை (Viralimalai) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Thumb
விராலிமலை முருகன் கோயில்
Thumb
விராலிமலை முருகன் கோயில்

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]

விராலிமலை திருச்சியிலிருந்து தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 2,759 வீடுகளும், 10,883 மக்கள் தொகையும் கொண்டது.[5] விராலிமலை குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இவ்வூரானது கரூர் மக்களவைத் தொகுதிக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,759 வீடுகள் கொண்ட விராலிமலையின் மக்கள் தொகை 10,883 ஆகும். அதில் ஆண்கள் 5,483 மற்றும் 5,400 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.32% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.72% ஆகவுள்ளது.[6]

வரலாறு

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.[7] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.[8]

Remove ads

மயில் உய்வகம்

Thumb

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[9] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [10]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads