கொத்தன்குளம்

கன்னியாகுமரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

கொத்தன்குளம்map
Remove ads

கொத்தன்குளம் (ஆங்கிலம்: Kothankulam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, இராமபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

விரைவான உண்மைகள்


Remove ads

அமைவிடம்

இந்த ஊர் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து மருங்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு

1972 வரை கொத்தங்குளச்சேரி என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஊர் அதன் பின் கொத்தன்குளம் என அழைக்கப்படுகிறது. கொத்தன்குளம் (கொத்து + குளம்) கொத்து என்பது சம்பளத்தை குறிக்கும் உள்ளூர் வழக்கு. கூலி வழங்கும் குளக்கரையில் இவ்வூர் அமையப்பெற்றுள்ளதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொத்தன்குளம் கிராமத்தில் 99.2% மக்கள் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சாம்பவர் வகுப்பினர் ஆவர். இங்கு அய்யன் வள்ளுவன் நூலகம், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் சமூக நலக் கழகம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சி நிலையம் ஆகியன உள்ளன. 1893 ஆம் ஆண்டில், சர்வதேச கிறிஸ்தவ புராட்டஸ்டன்ட் அமைப்பான இரட்சணிய சேனை (இரட்சணிய சேனை) கொத்தன்குளம் குக்கிராமத்திலுள்ள மக்களை தற்கால கல்வி, பொருளாதார மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. [3][4] இம்மக்கள் கிறித்தவ வளர்ச்சிக்கு முன்னமே எழுதவும், படிக்க தெரிந்தவராயும் சோதிடத்தில் தேர்ந்தவராயும் இருந்தனர். இந்த குக்கிராமத்தின் முதல் மதம் மாறிய கிறிஸ்தவர் திரு. ராகேல் யேசுவடியான். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல், இந்த மக்கள் ஆன்மீகம், மாந்திரீகத்தில் கைதேர்ந்தவராயும் நாஞ்சில் பெருநன், நாஞ்சில் வள்ளுவன் அரசவை மற்றும் பின்னர் திருவிதாங்கூர் அரசவையின் பூசாரிகளாக பணியாற்றியுள்ளனர்.[5] உள்ளூர் இந்துக்கள் சுடலைமாடன், இசக்கியம்மன், இராவணசாம்பன் மற்றும் சந்தன மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றனர். இந்த ஊரிலுள்ள மக்களும் அருகிலுள்ள தேரூர் சாம்பவர்களும் தஞ்சையின் கும்பகோணம் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரிக்கு நீண்ட காலத்திற்கு முன்பு குடியேறியவர்கள் என்றும் தங்களை சம்பு வன்னியர்கள் என்றும் கூறுகின்றனர். 1972ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியிடம் முக்கிய பிரமுகர் வைத்த வேண்டுகோளின்படி அன்றைய கொத்தங்குளச்சேரி கொத்தன்குளம் என்று அழைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சிகாலத்தில் செயல்பட இருந்த ஆதிதிராவிட மக்களுக்கு நிலம் ஒதுக்கும் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்திற்கும் ஐந்து செண்ட் நிலம் ஆதிதிராவிடர் பட்ட நிலமாக ஒதுக்கப்பட்டது. 2017இல் மக்களின் வேண்டுகோளின் படி கிழக்கே அமைந்த ஊர் கொத்தன்குளம் கீழூர் என்றும், மேற்கு அமைந்த ஊர் கொத்தன்குளம் மேலூர் என்றும் முறையாக பெயரிடப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads