கொத்தபேட்டை , ஐதராபாத்து
இந்தியவிலுள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொத்தபேட்டை (Kothapet) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்திலுள்ள ஒரு பெரிய வணிக மற்றும் குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இது தேசிய நெடுஞ்சாலை 9 இன் ஒரு பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இது ரங்காரெட்டி மாவட்டத்தின் மகேசுவரம் தொகுதிக்குட்பட்டது.
Remove ads
வரலாறு
ஆரம்பத்தில் கிராம ஊராட்சியாக இருந்த கொத்தபேட்டை கிராமம், பின்னர் ஐதராபாத்து பெருநகர வளர்ச்சி ஆணையப் பகுதிக்குள் உள்வாங்கப்பட்டது. பின்னர், நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] இந்த கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து தெலங்காணா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் மனு ரத்து செய்யப்பட்டது. [3]
பொருளாதாரம்
தெலங்காணா மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய பழச் சந்தைகளில் ஒன்றாக கொத்தப்பேட்டை உள்ளது.[4] இங்கு அசையாச் சொத்து வணிகம் வளர்ந்து வருகிறது.[5] உள்ளூர் வணிகங்கள் காரணமாக ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கொத்தபேட்டை பழச்சந்தையை கொகெடாவுக்கு மாற்ற முன்மொழியப்பட்டது.[6]
போக்குவரத்து
ஐதராபாத்து மெட்ரோ , தெலங்காணா மாநிலப் போக்குவரத்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சைதன்யபுரி மெட்ரோ நிலையம் ஆகியவற்றால் இந்த பகுதி நன்கு இணைக்கப்பட்டுள்ளாது[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads