கொருக்குப்பேட்டை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

கொருக்குப்பேட்டைmap
Remove ads

கொருக்குப்பேட்டை[1] (ஆங்கிலம்: Korukkupet) என்பது சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதி. இப்பகுதி கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் மூலம் தொடருந்து சேவை பெறுகிறது.[2][3]

விரைவான உண்மைகள் கொருக்குப்பேட்டைKorukkupet, நாடு ...
Remove ads

அமைவிடம்

கொருக்குப்பேட்டை தெற்கில் வள்ளலார் நகர் மற்றும் பேசின் பாலமும், வடக்கே தண்டையார்பேட்டையும், கிழக்கில் வண்ணாரப்பேட்டையும் மற்றும் மேற்கில் பக்கிங்காம் கால்வாயும் வியாசர்பாடியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

உள்கட்டமைப்பு

2010ஆம் ஆண்டில், கொக்ரைன் பேசின் சாலை சமமட்டக் கடவு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இருப்பினும் இப்பாலம் தாமதமாகவே கட்டப்பட்டது.[4] கொருக்குப்பேட்டையில், கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், மணலி சாலையில், கனரக வாகனங்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை இரயில்வே கிராஸிங் நோக்கிச் செல்ல, 2023ஆம் ஆண்டு சனவரி மாதம் இறுதி வாரம் முதல் 2025ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.[5]

Remove ads

போக்குவரத்து

மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்கள்

மேலதிகத் தகவல்கள் பாதை எண், ஆரம்ப இடம் ...

தொடருந்து

கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை வழித்தடத்தில் உள்ளது.

மெட்ரோ ரயில்

இப்பகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையத்திலிருந்து 2 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் கொருக்குப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads