கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில்
கேரளத்தில் உள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில் (Kollam Rameswaram Mahadeva Temple) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில், கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.[1][2] இந்தக் கோயிலின் முதன்மை தெய்வம் மேற்கு நோக்கி எதிர்கொள்ளும் ராமேஸ்வரர் ஆவார். இந்த கொல்லம் ராமேஸ்வரம் மகாதேவர் கோவிலானது கேரளத்தின் 108 சிவன் கோவில்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலானது பரசுராமரால் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது.[3][4] இது 108 சிவாலய சேத்திரங்களில் உள்ள இரண்டு இராமேஸ்வரம் கோவில்களில் ஒன்றாகும். அமரவில இராமேஸ்வரம் மகாதேவர் கோயில் என்பது இன்னொரு இராமேஸ்வரம் கோயிலாகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமரவில என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் மேற்கிலும், வடக்கு பக்கங்களில் என இரண்டு சிறிய கோபுரங்கள் உள்ளன. மேற்கில் பலிபீடத்தின் அருகில் செப்பினாலான கொடி மரம் உள்ளது. பிரதான கருவறையானது செவ்வக வடிவில் உள்ளது மேலும் சன்னதி கல் மற்றும் மரங்களில் அழகிய வேலைப்பாடுகளால் அழகூட்டபட்டுள்ளது. கேரள-திராவிட கலைப் பாணியில் வலியம்பலம் மற்றும் பாலகல்பூரா போன்றவை உள்ளன.[3][5]
Remove ads
கல்வெட்டுகள்
இராமேஸ்வரம் கோயிலின் முற்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு தூணில் 12 ஆம் நூற்றாண்டின் சேர மன்னரான இராம குலசேகரனின் அரசாணை உள்ளது.[6]
துணை தெய்வங்கள்
மேலும் காண்க
- 108 சிவன் கோயில்கள்
- கேரள கோவில்கள்
- அமரவில ராமேஸ்வரம் ஸ்ரீ மகாதேவா் கோயில்
- ஆனந்தவல்லேஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads