கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத் (ஆகத்து 8, 1941 - ஏப்ரல் 16, 2010[1]), சுருக்கமாக மற்றும் பரவலாக சி.கே.பிரகலாத் உலகின் பல முன்னணி வணிகநிறுவனங்களால் மேலாண்மை குறித்த அறிவுரைக்காக நாடப்படும் புகழ்பெற்ற பேராசிரியர் ஆவார். அவரது ஆய்வுகள் சிறப்பாக கூட்டாண்மை உத்திகள் (corporate strategy) மற்றும் பெரிய, விரிவான பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்ட மேலாளர்களின் பங்கு போன்றவற்றில் அமைந்திருந்தது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைப் பேராசிரியராக பணியாற்றிய பிரகலாத் தமது கல்விச்சேவைக்காக 2009 ஆம் ஆண்டு இந்திய அரசினால் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டார். முன்னதாக பிரவாசி பாரதீய சம்மான் (வெளிநாட்டு இந்தியருக்கான விருது) வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
Remove ads
வாழ்க்கை
இந்தியாவில் இளமைக்காலம்
1941ஆம் ஆண்டு மாத்வ பிராமணர் குடும்பத்தில் சமசுகிருத மொழி வல்லுனராகவும் சென்னையில் நீதிபதியாகவும் இருந்த தந்தைக்கு ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். 19ஆம் வயதில் சென்னை லயோலா கல்லூரியில் அறிவியல் இளங்கலைப் படிப்பு முடித்த நிலையில் உள்ளூர் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பணியாற்றினார். நான்கு ஆண்டுகள் அவர் இங்கு பணியாற்றியது தமது வாழ்நாளின் பெரும் திருப்பமாகக் கருதினார். பின்னர் இந்திய மேலாண்மைக் கழகம் அகமதாபாத்தில் பட்டமேற்படிப்பு படித்தார். அவரது வருங்கால மனைவியான காயத்திரியை அவர் இக்கழகத்திலேயே சந்தித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மக்கள் உள்ளனர்[3].
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பு
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியைத் தொடர்ந்த பிரகலாத் இரண்டரை ஆண்டுக் காலத்திலேயே பன்னாட்டு நிறுவன மேலாண்மை குறித்த தமது முனைவர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு 1975ஆம் ஆண்டு முனைவர் பட்டம் (D.B.A.)பெற்றார்.[4]
ஆசிரியப்பணி
முனைவர் பட்டம் பெற்றபின்பு இந்தியா திரும்பிய பிரகலாத் தாம் படித்த இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத்தில் ஆசிரியப்பணி ஆற்றினார். சில ஆண்டுகளில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இசுடீபன் எம். ராஸ் வணிகப் பள்ளியில் கூட்டாண்மை யுக்திக்கான பால் மற்றும் ருத் மக்ராக்கன் சிறப்பு பல்கலைக்கழகப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 16, 2010 அன்று சான் டியேகோவில் சிலநாட்களாக நோயுற்றிருந்து காலமானார்.
Remove ads
விருதுகள்
- 2009 - பிரவாசி பாரதீய சம்மான்[5]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
