கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்த தொடருந்து நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோயம்புத்தூர் சந்திப்பு (Coimbatore Junction, நிலையக் குறியீடு:CBE) தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முதன்மை தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன. சுமார் 20 இருப்புப் பாதைகளை உடைய தென்னிந்தியாவின் பெரிய இரயில் நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும்.
இதன் பெயரில் சந்திப்பு என்று இருந்தாலும் தொழில்நுட்பரீதியாக இங்கு தொடருந்து பாதைகள் எதுவும் சந்திப்பதோ பிரிவதோ இல்லை. உண்மையான சந்திப்புகள் கோவை வடக்கு சந்திப்பு (2.6 கி.மீ வடக்கே), போத்தனூர் (5.8 கி.மீ. தெற்கே) மற்றும் இருகூர்(16 கி.மீ. கிழக்கே). கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து செல்லும் வழித் தடங்களில் கோயம்புத்தூர்- மதுரை மட்டும் 'மீட்டர் கேஜ்'-லிருந்து 'பிராட் கேஜ்' (அகலப் பாதையாக) மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிற தடங்கள் முன்னரே அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டன.
Remove ads
வரலாறு
கோவையின் முதல் இரயில்நிலையமாக போத்தனூர் சந்திப்பே செயல்பட்டு வந்தது. பின் போத்தனூர் வழித்தடம் கோயம்புத்தூர் இரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டது. பின் கோவை - மேட்டுப்பாளையம் பாதையில் (கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு வழியாக) நீட்டிக்கப்பட்டது.[1]
வசதிகள்
நடைமேடை 1 மற்றும் 2 இல் உணவு வளாகங்கள் அமைந்துள்ளன. 1,2,3,4 நடைமேடைகளில் உணவுக்கடைகள் உள்ளன. நடைமேடை 1 மற்றும் 2இல் தங்கும் அறைகள் உள்ளன, நடைமேடை 1 மற்றும் 2 இறுதியில் பழக்கடையும் உண்டு.
நடைமேடை 1-4களில் பல தேநீர் மற்றும் பால் கடைகளும் தொலைபேசி சிற்றறைகளும் உள்ளன. நிலையத்தின் முகப்பிலும் இவை உள்ளன. நுழைவாயிலருகே இணைய உலாவுமையமும் உள்ளது.
வருமானம்
கோவை சந்திப்பு நிலையம் மட்டுமே ஆண்டொன்றிற்கு ரூ.3,859 மில்லியன் ஈட்டுகிறது. இது கோட்ட வருமானத்தில் 45% ஆகும். மேலும் சேலம் கோட்டத்திலேயே கோவை முதன்மையான ரயில் நிலையமாகும்.
முக்கிய புறப்படும் விரைவுவண்டிகள்
Remove ads
முக்கிய புறப்படும் பயணிகள் வண்டி
- நாகர்கோவில் பயணிகள் வண்டி
- மங்களூரு பயணிகள் வண்டி
- ஈரோடு பயணிகள் வண்டி
- கண்ணனூர் பயணிகள் வண்டி
- மேட்டுப்பாளையம் பயணிகள் வண்டி
- பாலக்காடு பயணிகள் வண்டி
- சோரனூர் பயணிகள் வண்டி
- திருச்சூர் பயணிகள் வண்டி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads