கோலா திராங்கானு மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலா திராங்கானு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu City Council); (சுருக்கம்: MBKT) என்பது மலேசியா, திராங்கானு, மாநிலத்தில் கோலா திராங்கானு மாநகரத்தையும்; கோலா நெருஸ் மாவட்டத்தையும் (Kuala Nerus District) நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் திராங்கானு மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.[1]
2008 சனவரி 1-ஆம் தேதி கோலா திராங்கானு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 605 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
Remove ads
பொது
கோலா திராங்கானு மாநகராட்சியின் வளர்ச்சி நிலைகள்:
- 1905 - கோலா திராங்கானு மாவட்ட வாரியம் (Kuala Terengganu District Board)
- 1937 - கோலா திராங்கானு & மாராங் நகராட்சி (Kuala Terengganu & Marang Town Council)
- 1979 - கோலா திராங்கானு நகராட்சி (Kuala Terengganu Municipal Council)
- 2008 - கோலா திராங்கானு மாநகராட்சி (Kuala Terengganu City Council)
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற திராங்கானு மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோலா திராங்கானு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].
Remove ads
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வர்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads