கோலாலம்பூர் ஆம்வங்கி கோபுரம்
மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆம்வங்கி கோபுரம் அல்லது மெனாரா ஆம்பேங்க் (மலாய்; Menara AmBank Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur AmBank Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 227 மீ; (745 அடி) உயரத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.
அராப்-மலேசியன் வங்கி (Arab-Malaysian Bank) என்பதன் சுருக்கமே ஆம்வங்கி (AmBank) ஆகும்.
மலேசியாவின் 41-ஆவது உயரமான கட்டிடமாகவும்; கோலாலம்பூரில் 29-ஆவது உயரமான கட்டிடமாகவும் விளங்கும் ஆம்வங்கி கட்டிடம், யாப் குவான் செங் சாலையில் (Jalan Yap Kwan Seng); கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 0.05 கிமீ தொலைவில் உள்ளது.
மேலும் இந்தக் கோபுரம், பி ராம்லி சாலையும் (Jalan P Ramlee); ராஜா சூலான் சாலையும் (Jalan Raja Chulan) சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[2]
Remove ads
பொது
இது 46 மாடிகளைக் கொண்ட ஓர் அலுவலகக் கோபுரமாகும். இந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பிற அடையாளங்களில் கோலாலம்பூர் கோபுரம், பிளாசா சீ கோய் சான் (Plaza See Hoy Chan), தி வெல்ட் (The Weld) பேரங்காடி; மற்றும் விசுமா எம்பிஎல் (Wisma MPL) ஆகியவை அடங்கும்.[3]
அம்பாங் சாலையின் வடக்கே அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தின் அருகில் நிறைய வானளாவிய கட்டிடங்களும்; ஒரு வணிக மாவட்டமும் உள்ளன.[4]
திறப்பு
மலேசிய ரிங்கிட் RM 322.6 மில்லியன் செலவில்,1998-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2003-ஆம் ஆண்டு, மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
கட்டிடத்தின் உச்சியில் 17 மீ (56 அடி) உயர அலைக்கம்பம் உள்ளது. இந்தக் கோபுரத்தில் ஆம்வங்கி குழுமத்தின் (AmBank Group) தலைமையகமும் ஏசர் கணினி நிறுவனத்தின் (Acer Sales and Services) தலைமையகமும்; சம்சுங் நிறுவனத்தின் மலேசியத் தலைமையகமும் உள்ளன.[5] The tower houses the headquarters of AmBank Group.[5]
Remove ads
சிறப்பு இயல்புகள்
இந்தக் கோபுரத்தின் அடித்தளத்தில் 557 கார்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன.[6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

