சங்கரன்புதூர்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கரன்புதூர் (Sankaranputhoor) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தேரூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமம் ஆகும்.[3][4]. இங்கு சுமார் 150 வீடுகளும் 800 மக்களும் வசிக்கின்றனர். ஊரின் வடபுறத்தே நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் செல்கிறது. இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் தண்ணீர் கன்னியாகுமரி கடலில் சென்று சேருகிறது.
Remove ads
வரலாறு
திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த காலகட்டத்தில் இவ்வூரில் வசித்து வந்த குடும்பங்கள் திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனைக்கு நெல் கொண்டு செல்லும் பணியைச் செய்தனர். இவர்களின் கடுமையான உழைப்பையும் விசுவாசத்தையும் கண்ட மன்னர் இவர்களுக்கு இந்த ஊரை நிர்மாணித்தார். ஊரைச் சுற்றியுள்ள மற்றும் ஊரையும் சேர்த்து உள்ள இடங்கள் அனைத்தும் ஊர் கோவிலில் உள்ள முத்தாரம்மன் பெயருக்கு இருக்கிறது. எனவே இந்த இடத்தின் சொத்து வாங்கல் விற்பனை அனைத்தும் ஊர்க்காரர்களுக்கு இடையே மட்டும்தான். கடுமையான மழைநாளில் மாட்டின் மேல் கொண்டு சென்ற நெல் நனைந்து விடக்கூடாது என்பதற்காக கட்டியிருந்த வேட்டியால் நெல்லை மூடி பத்திரமாகக் அரண்மனைக்குக் கொண்டு சேர்த்ததற்காகவே இவ்வூர் இவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது செவிவழிச் செய்தி.
Remove ads
கோவில்கள்
இவ்வூரில் கீழ்க்கண்ட கோவில்கள் அமைந்துள்ளன.
- முத்தாரம்மன் கோவில்
- தென்கரை மஹாராஜேஸ்வரர் கோவில்
- அணச்சாவுடையார் சாஸ்தா கோவில்
- கலிதீர்த்த அய்யனார் கோவில்
- சுடலைமாடன் கோவில்
- இசக்கியம்மன் கோவில்
- பூதத்தான் கோவில்
- விநாயகர் கோவில்
- வண்டிமறிச்சியம்மன் கோவில்
- மாரியம்மன் கோவில்
ஊரின் அமைப்பு
ஊரின் வடக்கே நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயும், தெற்கே பள்ளகுளமும், மேற்கே மாங்குளமும், கிழக்கே வயல்வெளிகளும் அமைந்துள்ளன. ஊரின் அருகே இராமபுரம், ஆண்டார்குளம், கொத்தன்குளம், கண்ணன்பதி, தேவகுளம், அழகனாபுரம் மற்றும் கோட்டவிளை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் இவ்வூரிலிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவிலும் சுசிந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் இவ்வூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads