இந்தியாவின் நிர்வாக அலகுகள்

From Wikipedia, the free encyclopedia

இந்தியாவின் நிர்வாக அலகுகள்
Remove ads

இந்தியாவின் நிர்வாக அலகுகள் (Administrative divisions of India), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவை நிர்வகிக்க 4 அடுக்கு கொண்ட நிர்வாக அலகுகள் உள்ளது. அவைகள்:

  1. இந்திய அரசு - இந்தியா முழுமைக்குமானது
  2. மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகள்
  3. வருவாய் கோட்டம்
  4. மாவட்டங்கள் அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (இஆப & தாலுகா அளவில் வருவாய் வட்டாச்சியர்
  5. குறுவட்டம்
  6. வருவாய் கிராமம்
  7. மாநகராட்சிகள்
  8. நகராட்சிகள்
  9. பேரூராட்சிகள்
  10. ஊராட்சி ஒன்றியங்கள்
  11. கிராம ஊராட்சிகள்
விரைவான உண்மைகள் இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும், வகை ...

இந்தியா முழுமைக்கும் நிர்வகிக்க இந்திய அரசும், மாநில & ஒன்றியப் பகுதிகளை நிர்வகிக்க மாநில மற்றும் ஒன்றியப் பகுதி அரசுகளும், மாவட்டங்களை நிர்வகிக்க இஆப தரத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்களும், ஊராட்சிப் பகுதிகளை நிர்வகிக்க மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் உள்ளது.

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலஙகளில் வருவாய் வட்டங்களுக்கு மாற்றாக மண்டல்கள் எனும் நிர்வாக அலகுகள் உள்ளது.

Remove ads

தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்

இந்தியாவின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடிகள் நிறைந்த வடகிழக்கு இந்தியா மற்றும் லடாக் போன்ற பகுதிகளின் மலை மாவட்டங்களை நிர்வகிக்க மலைவாழ் பழங்குடி மக்களைக் கொண்ட தன்னாட்சி நிர்வாகக் குழுக்கள் செயல்படுகிறது.

இந்தியாவின் புவியியல் பகுதிகள்

இந்தியாவின் வரலாற்றுப் பகுதிகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads