சஞ்சயன் (மகாபாரதம்)

From Wikipedia, the free encyclopedia

சஞ்சயன் (மகாபாரதம்)
Remove ads

சஞ்சயன் (Sanjaya or Sanjay) (சமசுகிருதம்:सञ्जय) மகாபாரதம் காவியத்தில் மன்னர் திருதராட்டிரனின் தேரோட்டியும், ஆலோசகரும் ஆவார். இவர் சூதர் மரபினர் ஆவார்/[1] சஞ்சயனுக்கு வேதவியாசர் அருளிய தெய்வீகப் பார்வையைக் கொண்டு, பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை மன்னர் திருதராட்டிரனுக்கு உடனுக்குடன் உரைத்துக் கொண்டே இருப்பார்.[2] குருச்சேத்திரப் போர்க்களத்தில் தன் மகன்கள் இறந்த செய்திகளைக் கேட்டு மன்னர் திருதராஷ்டிரன் துயரம் அடைந்த போது, சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.

விரைவான உண்மைகள் சஞ்சயன் (மகாபாரதம்), Information ...
Thumb
திருதராட்டிரன் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்புதல்

மன்னர் திருதராட்டிரன் கட்டளைப்படி குருச்சேத்திரப் போரை நிறுத்தக் கோரி சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது சென்றார்.[3][4]

போரில் வென்ற பாண்டவர்கள் முடிசூடிக் கொண்ட பின்னர், சில காலம் கழித்து திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் ஆகியோர் வனவாசம் செல்லும் போது, சஞ்சயனும் அவர்களுடன் வனத்திற்கு பயணித்தான்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads