சதர்காட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதர்காட் (Chaderghat) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சதர்காட் பாலம் ஐதராபாத் நிசாம்களின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலம் முக்கிய புறநகர்ப் பகுதிகளை பிரதான நகரத்துடன் இணைக்கிறது.
Remove ads
வரலாறு
சதர் என்ற உருது வார்த்தை ஒரு வெள்ளை தாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றின் குறுக்கே ஒரு அணைகட்டுக்குப் பிறகு இந்த இடம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஒரு 'சதர்' அல்லது ஒரு வெண்மையான தண்ணீரை உருவாக்கியது. [1] புகழ்பெற்ற சதர்காட் பாலம் அல்லது ஓலிபாண்ட் பாலம் 1831ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதற்கு கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குநராகவும் தலைவராகவும் இருந்த ஜேம்ஸ் ஓலிபாண்டின் பெயரிடப்பட்டது. [2]

சதர்காட் முதன்முதலில் 1886 ல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டில், இது ஐதராபாத்து நகராட்சியுடன் இணைக்கப்பட்டு ஐதராபாத்து மாநகராட்சியை உருவாக்கியது. சதர்காட்டைச் சுற்றி கோட்டி, கவுலிகுடா, காச்சிகுடா, தார்-உல்-ஷிபா, மலக்பேட்டை போன்ற ஊர்கள் சூழ்ந்துள்ளன. [3]
Remove ads
வணிக முக்கியத்துவம்
பல்வேறு வணிக வளாகங்களும் மளிகைக் கடைகளுடன் ஒரு வணிகப் பகுதி உள்ளது.
ஐதராபாத்து உணவு முறைக்கு புகழ் பெற்ற நயாகாரா உணவு விடுதி இங்கே அமைந்துள்ளது. கமல் மற்றும் திருமலை என்ற சில பிரபலமான திரையரங்குகளுக்கு இது ஒரு இடமாகும், அவை இப்போது இடநெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளன. சதர்காட்டின் பிரதான சாலைக்கு முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் பெயரிடப்பட்டது. மேலும் இது டாக்டர் ராஜேந்திர பிரசாத் மார்க் என்றும் குறிப்பிடப்படுகிறது.
Remove ads
போக்குவரத்து
தெலங்காணா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சதர் காட்டிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குகிறது. அருகிலேயே மலக்பேட்டை தொடர் வண்டி நிலையம் உள்ளது. சதர் காட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலேயே மகாத்மா காந்தி பேருந்து நிலையமும் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads