சத்விந்தர் கௌர் தலிவால்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்விந்தர் கௌர் தலிவால்(satwinder kaur dhaliwal) (பிறப்பு 17 ஜூன், 1953) ஓர் அரசியல்வாதியும், சமூக சேவகரும், பஞ்சாபிலுள்ள உள்ள ரூப்நகர் தொகுதியில் இருந்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.[1]

விரைவான உண்மைகள் சத்விந்தர் கௌர் தலிவால், நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

சத்விந்தர் 17 ஜூன், 1953 அன்று இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள அம்பலாவிலுள்ள பாபியால் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர், ஜூலை 13, 1975இல் சர்தார் இராஜேந்தர் சிங் தலிவால் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1]

கல்வி

சத்விந்தர், வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டத்தையும், சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலையும் முடித்தார்.[1]

தொழில்

இவர் 1996 முதல் சிரோமணி அகாலி தளம் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 1997ஆம் ஆண்டில் இவர் பதினோராவது மக்களவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் நாடாளுமன்ற விவசாயக் குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில், இவர் பனிரெண்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர்,

  • இந்திய இரயில்வே குழு உறுப்பினர்.
  • நாடாளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டங்களின் உறுப்பினர்கள் குழு.
  • உறுப்பினர், ஆலோசனைக் குழு, சழுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் [1]

போன்றவற்றிலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads