சபரி (இராமாயணம்)

From Wikipedia, the free encyclopedia

சபரி (இராமாயணம்)
Remove ads

சபரி (Shabari) ( சமக்கிருதம்: शबरी ) இந்து இதிகாச இராமாயணத்தில் வருகின்ற ஒரு வயதான பெண் துறவி ஆவார். அவருடைய பக்தியின் காரணமாக ராமரின் தரிசனத்தையும் அருளையும் பெற்ற ஒரு பக்திமிக்க பெண்ணாக அவர் விவரிக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் சபரி (இராமாயணம்) ...

கதை

Thumb
இராமாயணத்தில் சபரி படலம்- 20ம் நூற்றாண்டு ஓவியம்

சபரி, ஒரு பழங்குடி கிராமத்திலிருந்து வந்த பெண். [1] கிருஷ்ண தத் கூற்றுபடி, அவர் அறிவை தேடுபவர் மற்றும் தர்மத்தின் பொருளை அறிந்து கொள்ள விரும்பினார். நெடு நாட்களாக பயணம் செய்த பிறகு, ரிஷ்யமுக மலை அடிவாரத்தில் மதங்க முனிவரை சந்தித்து, அவரையே தன் குருவாக ஏற்றுக் கொண்டு பக்தியுடன் அவருக்குச் சேவை செய்தார். [1] அவரது குரு மதங்க முனிவர் இறக்கும் போது, சபரி ஒரு வயதான பெண்மணியாக, இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் குருவிற்கு பணிவிடை செய்த பிறகு, இப்போது மதங்க முனிவர் அடைந்த அதே நிலைபேற்றினை தானும் அடைவதற்கு முயன்றார். [1] அப்போது குரு, அவரது தன்னலமற்ற சேவையின் மூலம் ராமரின் தரிசனத்தை அவர் காண இருப்பதாகவும், அதுவரை அவர் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறினார். இவ்வாறு கூறிய மதங்க முனிவர், தாமரைப் பூவின் நிலையில் அமர்ந்தவாறே மகாசமாதி அடைகிறார். சபரியும் தனது குருவின் சொற்படி,ராமரின் வருகைக்காக காத்திருக்கிறார். [1]

ஒவ்வொரு நாளும் சபரி தனது ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து, ஊன்றுகோல் உதவியுடன், ராமருக்காக பழங்களை பறித்துக்கொள்வார். அவள் ஒரு பழத்தை பறித்து அதைச் சுவைத்துப் பார்த்து, அது இனிமையானதாக இருந்தால், அவள் கூடைக்குள் அதை வைப்பார். கசப்பானவற்றை நிராகரிப்பார். ராமருக்கு நல்ல மற்றும் இனிப்பு பழங்களை கொடுக்க விரும்பியதால் இவ்வாறு செய்து வரலானார். [2] தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய பழங்களை முன்கூட்டியே தான் சுவைத்துப் பார்ப்பது தவறு என்கிற எண்ணம் சபரிக்கு ஏற்படவேயில்லை. இவ்வாறு சில பழங்களைச் சேகரித்த பின்னர் சபரி ஆசிரமத்திற்கு சென்று, ராமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார். [2] இங்கு சபரி என்பது பண்பட்ட, முதிர்ந்த, மெய்யறிவுக்காக ஏங்கும் / காத்திருக்கும் சீவனைக் குறிக்கும் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. [3]

இராமரின் வருகை

வேத நூல் படி, நூற்றுக்கணக்கான யோகிகள் தங்கள் ஆசிரமங்களில் ராமரின் தரிசனத்தைப் பெற காத்திருந்தாலும், ராமர், சபரியின் உண்மையான பக்தி காரணமாக அவரின் ஆசிரமத்திற்கு சென்றார். ராமனை பார்த்து, சபரி மிகவும் மகிழ்ச்சியடைந்து, "உன் தரிசனத்திற்காக காத்திருந்த பல உயர்ந்த யோகிகள் இருந்த போதிலும், ஒன்றுமேயில்லாத என்னைக் காண வந்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. என் இதயத்தைத் தவிர தங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை. ஆனால், இங்கு சில பழங்கள் உள்ளன. என் இறைவா!" எனச் சொல்லியவாறே அவர் கவனமாக சேகரித்த பழங்களை ராமருக்கு அளித்தார். ராமர் பழங்களை ருசித்துக்கொண்டிருந்தபோது, சபரி பழங்களை ஏற்கனவே சுவைத்திருப்பதை உணர்ந்த இலட்சுமணன் கவலைப்பட்டு, ராமரிடம் பழங்கள் உண்பதற்கு தகுதியற்றவையாக உள்ளது எனக் கூறினார். அதற்கு, ராமர் [4] அவர் பல வகையான உணவைப் புசித்துள்ளதாகவும், எதுவும் "இத்தகைய பக்தியால் வழங்கப்பட்ட இந்த பழங்களுக்குச் சமமாக இருக்க முடியாது என கூறினார். மேலும், இலட்சுமணிடம் அவற்றை உண்ணுமாறு கூறினார். சுவைத்துப் பார்த்தால் பக்தியின் சுவையை அறியலாம் என தெளிவுபடுத்தினார். மேலும், "யாராவது ஒரு பழம், இலை, பூ, அல்லது சிறிது நீர் போன்ற இவற்றில் ஏதேனும் ஒன்றை அன்பான பக்தியுடன் , தருகிறார்களோ, அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். " என்று கூறினார்.

சபரியின் பக்தியால் மகிழ்ச்சியடைந்த ராமர், தனது பார்வையால் அவரை ஆசீர்வதிக்கிறார். ராமர், தனக்கு பழங்களை வைத்து தந்த கிண்ணங்கள் மற்றும் இலைகளை கவனிக்கிறார். அவருக்கு சபரியின் கடின உழைப்பு தெரிகிறது. அதனால் மரங்களை ஆசீர்வதிக்கிறார். இதனால் மரத்தின் இலைகள் கிண்ணத்தின் வடிவத்தில் இயற்கையாக வளர்கின்றன.   மேலும், ராமருக்கு சுக்கிரீவனிடமிருந்து உதவி பெறவும், எங்கே அவரைக் காணலாம் என்பது பற்றியும் கூறுகிறார். சபரி மிகவும் புத்திசாலி மற்றும் அறிவார்ந்த துறவி என்று ராமாயணம் கூறுகிறது. [5]

Remove ads

மேலும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads