சப்போரிசுக்கா அணுமின் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சப்போரிசுக்கா அணுமின் நிலையம் (Zaporizhzhia Nuclear Power Station, உக்ரைனியன்: Запорізька АЕС) உக்ரைனில் எனர்கதார் நகரில் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமும், உலகின் 10 பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றுமாகும். 1985 இல் சோவியத் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட இந்த் அணு உலை, தென்கிழக்கு உக்ரைன் நாட்டின் சப்போரியா மாகாணத்தின் எனர்கதார் நகரில், தினேப்பர் ஆற்றின் தெற்குக் கரையில் உள்ளது.
இந்நிலையத்தில் 6 VVER-1000 அழுத்த நீர் அணு உலைகள் (PWR) உள்ளன, ஒவ்வொன்றும் 235U (LEU) மூலம் எரிபொருளாகக் கொண்டு[1] 950 MWe உற்பத்தி செய்கிறது. மொத்த உற்பத்தி 5,700 MWe ஆகும்.[2] முதல் ஐந்து அலகுகளும் 1985 இற்கும் 1989 இற்கும் இடையில் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டது, ஆறாவது அலகு 1995 இல் சேர்க்கப்பட்டது. இந்த ஆலை அணுசக்தியிலிருந்து பெறப்பட்ட நாட்டின் மின்சாரத்தில் கிட்டத்தட்ட பாதியை உற்பத்தி செய்கிறது.[3] அத்துடன் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் இது ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.[4]
இவ்வணுமின் நிலையத்திற்கருகே சப்போரிசுக்கா அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. 2022 மார்ச் 4 இல், இவ்விரண்டு மின் நிலையங்களும் உருசியப் படையினரால் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது கைப்பற்றப்பட்டது.[5][6][7][8]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads