சல்கான் புதைபடிவ பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சல்கான் புதைபடிவ பூங்கா (Salkhan Fossils Park), அதிகாரப்பூர்வமாக சோன்பத்ரா புதைபடிவ பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு புதைபடிவ பூங்காவாகும். இது சோன்பத்ரா மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 5Aஇல் ரோபர்ட்சுகஞ்சிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சால்கன் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இப்பூங்காவில் கிட்டத்தட்ட 1400 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மதிப்பிடப்பட்ட புதைபடிவங்கள் உள்ளன. கைமூர் வனவிலங்கு சரகத்தில் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள கற்பாறைகளில் புதைபடிவங்கள் வளையங்களாகக் காணப்படுகின்றன.[1]
Remove ads
நிலவியல்
சோன்பத்ரா புதைபடிவ பூங்காவில் காணப்படுவன அல்கா மற்றும் இசுட்ரோமாடோலைட் வகை புதைபடிவங்கள் ஆகும். கைமூர் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள கைமூர் மலைத்தொடரில் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பூங்கா பரவியுள்ளது. இது மாநில வனத்துறையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.[1]
வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி
1930களிலிருந்து சேகரிக்கப்பட்ட புதைப்படிவங்கள் இன்றைய பூங்கா பகுதியில் காணப்படுகிறது. இதனை புவியியலாளர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆடென் (1933), மாத்தூர் (1958 மற்றும் 1965), மற்றும் பேராசிரியர் எஸ். குமார் (1980–81) ஆகியோர் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள். 23 ஆகஸ்ட் 2001 அன்று, இந்தி செய்தித்தாள் இந்துஸ்தானுக்கு பத்திரிகையாளர் விஜய் சங்கர் சதுர்வேதி எழுதிய கட்டுரையில் இந்த பூங்கா குறித்த செய்தி இடம்பெற்றது. ஆகஸ்ட் 8, 2002 அன்று மாவட்ட நீதவான் பகவன் சங்கர் இதனைப் புதைபடிவ பூங்காவாக முறையாகத் திறந்துவைத்தார்.[1]
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 42 பிரதிநிதிகள் பங்கேற்ற பன்னாட்டுப் பயிற்சிப் பட்டறை 2002 டிசம்பரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட கனடிய புவியியலாளர் எச்.ஜே. ஹாஃப்மேன் புதைபடிவங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற "அழகான மற்றும் தெளிவான புதைபடிவங்களை" உலகில் வேறு எங்கும் காண இயலாது என்று குறிப்பிட்டார்.[2] 2004 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர் முகுந்த் சர்மா இப்பகுதியில் மேலும் ஆராய்ந்தார்.[1]
2013ஆம் ஆண்டில், சால்கன் புதைபடிவ பூங்காவின் வளர்ச்சிக்காக ₹12.5 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியது.[3]
Remove ads
அனுகல்
சோன்பத்ராவிற்கு அருகில் உள்ள விமான நிலையம் பாபேட்பூரில் உள்ளது. இது ரோபர்ட்சுகஞ்சிலிருந்து 110 கி.மீ. தொலைவில் வாரணாசி மாவட்டத்தில் உள்ளது.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் ரோபர்ட்சுகஞ்சி ஆகும். இது தில்லி-ஹவுரா இரயில் பாதையில் சுன்னார் தொடருந்து நிலைய இரயில்வே பாதையில் இணைப்பு நிலையமாக உள்ளது.
சாலைமார்க்கமாக பயணம் செய்வதாயின், சோன்பத்ரா நன்கு இலக்னோ, அலகாபாத், வாரணாசி, மிர்சாபூருடன் 24 மணி நேரப் பேருந்து சேவையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads